பொது செய்தி

தமிழ்நாடு

மா.திறனாளிகள் ஓட்டளிக்க சக்கர நாற்காலிகள் தயார்

Added : ஏப் 17, 2019
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நடக்கவுள்ள தேர்தலில், மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிக்கச் செல்ல, சக்கரநாற்காலிகள் தயார் நிலையில் உள்ளன, என, கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி தொகுதி லோக்சபா, அரூர்(தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டசபை இடைத்தேர்தல்கள் நடக்க உள்ளன. இதில், மாற்றுத்திறனாளிகள் சிரமமில்லாமல், 100 சதவீதம் ஓட்டளிக்க ஏதுவாக, சக்கரநாற்காலிகள் உள்ளன. மாவட்டம் முழுவதும், 9,593 மாற்றுத்திறனாளிகள், 812 சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவர்களுக்கு, அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும், தன்னார்வலர்கள் உதவி செய்ய உள்ளனர். ஒவ்வொறு தொகுதிக்கும், இரண்டு வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள், தாங்கள் வசிக்கும் பகுதி, ஓட்டளிக்கும் சாவடி, சக்கர நாற்காலி மற்றும் வாகனம் தேவைப்படுவோர், '1950' என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X