ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணியில் 2606 போலீசார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி பாதுகாப்பு பணியில் 2606 போலீசார்

Added : ஏப் 17, 2019

தர்மபுரி: தர்மபுரி லோக்சபா மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் இடைத்தேர்தல் நாளை நடக்கிறது. தேர்தலை பாதுகாப்பாக நடத்தவும், ஒட்டுப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பாக கொண்டு சென்று திரும்பவும், போலீசார், வெளிமாநில போலீசார் உள்ளிட்டோர் ஈடுபட உள்ளனர். அதன் படி, 1,348 போலீசார், தீயணைப்புத்துறையினர், ஓய்வு பெற்ற போலீசார், ராணுவத்தினர் என, 586 பேர், தமிழ்நாடு பட்டாலியன் போலீசார், 350 பேர், மத்திய ரிசர்வ் போலீசார், 280 பேர், கேரள மாநிலத்தை சேர்ந்த, 100 பேர் என, மொத்தம், 2,606 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, ஐந்து சட்டசபை தொகுதிகளில், பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ள இவர்களை, தர்மபுரி எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து, எஸ்.பி.,ராஜன், ஏ.எஸ்.பி., சுஜாதா, தேர்தல் டி.எஸ்.பி., ஸ்ரீதரன் ஆகியோர், பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டிய பகுதிகளுக்கு, நேற்று பிரித்து அனுப்பினர். ஓட்டுச்சாவடிகளுக்கு, வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மற்றும் அதில் பாதுகாப்புக்கு செல்பவர்களையும் பிரித்து அனுப்பப்பட்டனர். தர்மபுரி அடுத்த செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து இன்று காலை முதல், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன், ஓட்டுச்சாவடிகளுக்கு கொண்டு செல்ல, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X