பொது செய்தி

தமிழ்நாடு

100 சதவீதம் ஓட்டளிப்பு குறித்து ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு

Added : ஏப் 17, 2019
Advertisement

தர்மபுரி: 100 சதவீத ஓட்டளிப்பு குறித்து, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில், ரயில் பயணிகளுக்கு, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. தர்மபுரி பாராளுமன்ற தேர்தல், 2019 தொடர்பாக, 100 சதவீத ஓட்டளிப்பு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை, 11:00 மணிக்கு, தர்மபுரி ரயில்வே ஸ்டேஷனில், ரயிலில் வந்த பயணிகளுக்கு மகளிர் திட்ட இயக்குனர் ஆர்த்தி, விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். தொடர்ந்து, அங்கிருந்த ஆட்டோக்களில், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. பகல், 1:00 மணிக்கு, தர்மபுரி நகராட்சிக்கு உட்பட்ட அண்ணாமலை தெருவில் உள்ள, மாதர் சங்க முதியோர் இல்லத்தில், 100 ஓட்டளிப்பு உறுதிமொழி ஏற்க்கப்பட்டது. இதில், 40க்கும் மேற்பட்ட முதியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து, ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, அவர்களுக்கு விளக்கப்பட்டது. மகளிர் திட்ட, உதவி திட்ட அலுவலர்கள் பலர் இதில் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X