பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கிருஷ்ணகிரி

Added : ஏப் 17, 2019
Advertisement

குரங்கு தொல்லை; மக்கள் அவதி: கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்துக்கு தினமும், ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இவர்கள் வரும் டூவீலர்களை குறிவைத்து வரும் குரங்குகள் கூட்டம், டூவீலர்களில் உணவுப் பொருட்கள் இருக்கிறதா என டேங்க் கவர்களை கடித்து சோதனை செய்கிறது. இதனால், டேங்க் மற்றும் சீட் கவர்கள் சேதமாகிறது. மக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். கலெக்டர் அலுவலத்தில் உள்ள குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அடையாளமின்றி வேகத்தடை: காவேரிப்பட்டணம் ஒன்றியம் பண்ணந்தூர் - அகரம் சாலையில் வேகத்தடை உள்ளது. இது குறித்த எச்சரிக்கை அறிவிப்பு பலகையோ, வெள்ளைக் கோடுகளோ போடாததால், வாகன ஓட்டிகள் தடுமாறி அடிக்கடி விபத்து நடக்கிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. விபத்தை தடுக்க இங்குள்ள வேகத்தடையில் வெள்ளைக் கோடுகள் போட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தண்ணீரின்றி தொட்டி; பொதுமக்கள் தவிப்பு: சூளகிரி முஸ்லிம் தெருவில், மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் தொட்டி, தற்போது தண்ணீர் இல்லாமல் உள்ளது. மக்களுக்கு சின்டெக்ஸ் தொட்டியால் எந்த பயனும் இல்லாமல் உள்ளது. கோடை காலம் துவங்கி விட்டதால், தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதை மனதில் வைத்து, சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்பினால், மக்களுக்கு உதவியாக இருக்கும். எனவே அதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X