சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணை வைத்து பணம் கேட்டு மிரட்டிய 2 பேர் கைது

Added : ஏப் 17, 2019
Advertisement

ஊத்தங்கரை: அரூர், மேல்பாட்ஷா பகுதியை சேர்ந்தவர் கணேசன், 25. இவர், தனியார் நிறுவனத்தில் கேபிள் பதிப்பு ஒப்பந்ததாரராக வேலை பார்த்து வருகிறார். இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த பாம்பாறு அணை மாரம்பட்டி பகுதியில், கேபிள் பதிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில், அதே பகுதியை சேர்ந்த ராஜா, 34, சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த விஜி, 25, ஆகியோருடன் கணேசனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, அதே பகுதியில் வசிக்கும், 35 வயதுள்ள பெண்ணை தங்களுக்கு தெரியும்; அவர் வீட்டுக்கு சென்றால் ஜாலியாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இதை நம்பி அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற கணேசனை, நிர்வாண படம் எடுத்துள்ளதாக கூறி இருவரும் பணம் கேட்டுமிரட்டியுள்ளனர். கொடுக்க மறுத்த அவரை, கத்தியை காட்டி கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். இதுகுறித்து கணேசன் அளித்த புகார்படி, ஊத்தங்கரை போலீசார் விசாரித்து ராஜா, விஜி ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X