பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பதிவுக்கு அனைத்து பணிகளும் தயார்

Added : ஏப் 17, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடக்க உள்ளது. இதற்காக கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு, ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதியில், 287 ஓட்டுச்சாவடிகளும், பர்கூரில், 292, கிருஷ்ணகிரியில், 307, வேப்பனஹள்ளியில், 301, ஓசூரில், 364, தளியில், 299 என, மொத்தம், 1,850 ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தப்பட்டு, சீல் வைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவை சரி பார்க்கும், விவிபேட் இயந்திரங்களும் தயாராக உள்ளன. ஒவ்வொரு தொகுதிக்கும், 17 சதவீத ஓட்டுப்பதிவு இயந்திரங்களும், 20 சதவீத விவிபேட் இயந்திரங்களும் கூடுதலாக இருப்பு வைக்கப்பட்டுள்ளன. இதே போல், ஓசூர் சட்டமன்ற இடைத்தேர்லுக்காக, 364 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் இயந்திரங்களும் தயாராக வைக்கப்பட்டுள்ளன. கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதிக்கு உண்டான, 307 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஆர்.டி.ஓ., அலுவலக பாதுகாப்பு அறையில் வைத்து, சீல் வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் ஓட்டுச்சாவடியின் வெளியில் ஒட்டப்பட்டுள்ள வேட்பாளர் விபரங்கள், ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சுற்றி வைக்க உள்ள அட்டை, அழியாத மை பாட்டில், சீல், முகவர்கள் கையொப்பமிடும் விண்ணப்பங்கள் என, 76 பொருட்கள் அடங்கிய, 307 பைகள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதனுடன் ஓட்டுப்பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் ஆகியவற்றை சேர்த்து, இன்று வாகனங்களில் ஏற்றி ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X