பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிச்செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி: வீடு வீடாக சென்ற ஆசிரியர்கள்

Added : ஏப் 17, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: பள்ளிச் செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கியன. கிருஷ்ணகிரியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், பள்ளிச்செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இப்பணி வரும் மே, 25 வரை நடக்கிறது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோதண்டபாணி தலைமையில், கிருஷ்ணகிரி அண்ணா நகர் பகுதியில் துவங்கி, ரயில்வே காலனி, பூந்தோட்டம், மாரியம்மன் கோவில் தெரு, பெரியசாமி தெரு, சென்னை சாலை, வெள்ளக்குட்டை ஆகிய பகுதிகளில், 6 முதல், 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி செல்லா, இடைநின்ற மாணவர்கள் மற்றும் பிறந்தது முதல், 18 வயதுக்கு உட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளையும் கணக்கெடுக்கும் பணிகள் நடந்தன. இந்த கணக்கெடுப்பு பணியில், 6 முதல், 14 வயதில், 8 குழந்தையும், 15 முதல், 18 வயதில், 11 குழந்தையும், 0 முதல் 18 வயதில், 21 மாற்றுத்திறன் குழந்தையும் கண்டறிந்து, மீண்டும் பள்ளியில் சேர்க்க ஆலோசனைகள் வழங்கப்பட்டன. இக்கணக்கெடுப்பில், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், கணக்காளர்கள், எஸ்.எம்.சி., உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, அண்ணா நகர் தலைமை ஆசிரியர் பாரதி மற்றும் பள்ளி செல்லா குழந்தைகள் திட்டக்கூறு ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X