பொது செய்தி

தமிழ்நாடு

வெளிமாநில போலீசார் உட்பட 3,650 பேர் பாதுகாப்பு பணி

Added : ஏப் 17, 2019
Advertisement

கிருஷ்ணகிரி: லோக்சபா தேர்தலில், வெளிமாநில போலீசார் உட்பட, 3,650 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு, நாளை நடக்க உள்ள நிலையில், நேற்று மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவு பெற்றது. கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், 1,850 ஓட்டுச்சாவடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்காக, 9,884 ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மற்றும் பல்வேறு குழுக்கள் என மொத்தம், 18 ஆயிரத்து, 274 அரசு ஊழியர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்ட போலீசார், 1,500 பேர், துணை ராணுவத்தினர், 300 பேர், ஊர்க்காவல் படையினர், 250 பேர், வெளிமாநிலத்தை சேர்ந்த போலீசார், 300 பேர், சிறப்பு அதிரடிப்படையினர், 300 பேர், முன்னாள் ராணுவத்தினர், 1,000 பேர் என, மொத்தம், 3,650 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இவர்களுக்கு, ஓட்டுச்சாவடிகளை ஒதுக்கும் பணிகள், எஸ்.பி., பண்டிகங்காதர் தலைமையில் நேற்று நடந்தது. மேலும், ஓட்டுச்சாவடிகளுக்கு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்வதற்காக, 307 வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அந்த வாகனங்கள் செல்ல வேண்டிய ஓட்டுச்சாவடி குறித்த விபரங்கள் வாகனங்களின் முகப்பில் ஒட்டப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X