சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு பிரிவினர் இடையே தகராறு: 19 பேர் மீது வழக்குப்பதிவு

Added : ஏப் 17, 2019
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த உலகம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 26. இவரது மாமா மதன் என்பவரின் மகன், சூர்யகுமார். இவர், மணியன்கல் பகுதியை சேர்ந்த சிறுமியை காதலித்து வந்தார். இருவரும், வீட்டிலிருந்து வெளியேறிய நிலையில், ஓசூர் அனைத்து மகளிர் போலீசில் கடந்த, 10ல் புகார் செய்யப்பட்டது. சூர்யகுமாரின் உறவினரான உலகம் பகுதியை சேர்ந்த மாதேஸ், 28, என்பவர், கடந்த, 14 இரவு, பாஞ்சாலி கோவில் தெருவில் உள்ள, மொபைல் போன் கடை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, சிறுமியின் உறவினர்கள், மாதேஷிடம் தகராறு செய்து தாக்கினர். அதை தடுக்கச்சென்ற அன்பழகன், கண்ணகி ஆகியோரும் தாக்கப்பட்டனர். அன்பழகன் புகாரின்படி, உலகம் பகுதியை சேர்ந்த நாகேஷ், 27, சக்திவேல், 25, விஜயகாந்த், 27, நாகேஷ், 32, சுரேஷ், ரவி, 33, ஆகிய ஆறு பேர் மீது, வன்கொடுமை சட்டத்தில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதேபோல், மற்றொரு தரப்பில், கரியப்பன் புகாரில், சின்ன சாக்கப்பா, 56, பிரபு, 32, மாதேஸ், 35, அன்பழகன், 23, கண்ணகி, 46, கார்த்திக், 31, சங்கர், 23, சவிதா, 35, வெங்கடேஷ், 53, செல்வராணி, 49, சேட்டு, 30, கணபதி, 48, ரவி, 32, ஆகிய, 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X