பொது செய்தி

தமிழ்நாடு

அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் அ.தி.மு.க.,வில் ஐக்கியம்

Added : ஏப் 17, 2019
Advertisement

ஓசூர்: ஓசூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், அ.ம.மு.க., சார்பில், புகழேந்தி போட்டியிடுகிறார். இவர், வேட்பாளராக நிறுத்தப்பட்ட நாளிலிருந்து, கட்சியினருடன் அனுசரித்து செல்லவில்லை என்ற, குற்றச்சாட்டு உள்ளது.
வேட்பாளர் பிரசாரத்துக்கு அழைக்காததால், தேர்தல் பணியிலிருந்து ஒதுங்கியிருந்த, ஓசூர் ஒன்றிய செயலாளரான கேசவமூர்த்தி என்ற தோட்டகிரி பாபு, தலைமை தன்னை ஆதரிக்கும் என, நினைத்து வந்தார். ஆனால், தலைமை அவரை கண்டு கொள்ளாத நிலையில், வேட்பாளரும் அவருக்கு சரியான மரியாதை கொடுக்கவில்லை. இதையறிந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, பாபு வீட்டிற்கு நேரடியாக சென்று, ஆதரவு கேட்டார். அ.ம.மு.க.,வில் இருப்பதால், தன்னால் ஆதரவு தர முடியாது என, பாபு கூறி விட்டார். இந்தநிலையில், அ.தி.மு.க.,வில் பாபு சேர்ந்து விட்டார் என, அ.ம.மு.க.,வினர் கட்டம் கட்டியதால், தொடர்ந்து பாபு ஓரம் கட்டப்பட்டார். ஒன்றிய பகுதிகளில், தேர்தல் பிரசாரத்துக்கு பாபு அனுமதி வாங்கியும், வேட்பாளர் புகழேந்தி வரவில்லை. ஒன்றிய செயலாளர் பாபு, கடந்த மூன்று ஆண்டுகளில், அ.ம.மு.க., கட்சிக்கு, 26 பஞ்., செயலர்கள், 135 கிளை செயலாளர்களை நியமித்து, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை, கட்சியில் சேர்த்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில், வேட்பாளர் மீதுள்ள குற்றச்சாட்டுகள் மற்றும் குறைகளை, தினகரன் கண்டு கொள்ளாமல் இருந்ததால் அதிருப்தியடைந்த பாபு, தன் ஆதரவாளர்களுடன், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் தியாகராஜரெட்டி முன்னிலையில் நேற்று, அ.தி.மு.க.,வில் தன்னை இணைத்து கொண்டார். ''அ.ம.மு.க., வேட்பாளர் புகழேந்தி மீது, அதிருப்தியில் உள்ள பலர், அ.தி.மு.க., வசம் வருவார்கள்,'' என, பாபு தெரிவித்தார். நாளை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும் நிலையில், அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர், அ.தி.மு.க.,வுக்கு தாவியது, அக்கட்சிக்கு, பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் நிலை உருவாகி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X