பொது செய்தி

தமிழ்நாடு

அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி வெற்றி பெற முடியாது: தம்பிதுரை சாபம்

Added : ஏப் 17, 2019
Advertisement

கரூர்: ''அரவக்குறிச்சி தொகுதி இடைத்தேர்தலில், செந்தில் பாலாஜி வெற்றி பெற முடியாது,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை பேசினார்.
கரூர், கோவை சாலையில் நடந்த இறுதி கட்ட பிரசாரத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் தம்பிதுரை பேசியதாவது: காவிரி தண்ணீரை தமிழகத்துக்கு விட மாட்டோம். மேகதாதுவில் அணை கட்டுவோம் என, காங்., கட்சி தலைவர் ராகுல், கர்நாடகா மாநிலத்தில் பேசி வருகிறார். காங்., கட்சி உள்ள தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டு போட வேண்டுமா என யோசித்து பாருங்கள். காவிரி நீர் உரிமையை பெற்று தந்தவர் ஜெயலலிதா. அவர் இல்லாத நிலையில் முதல் தேர்தலை சந்திக்கிறோம். பெரும்பாலான மாநிலங்களில், காங்., கட்சிக்கு வலுவான கூட்டணி இல்லை. இதனால், காங்., கட்சி மத்தியில் ஆட்சிக்கு வராது. நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும் என, நாட்டு மக்கள் விரும்புகின்றனர். காங்., கட்சியினரே, ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்க தயங்குகின்றனர். கடந்த லோக்சபா தேர்தலின்போது, அ.தி.மு.க.,வில் இருந்த செந்தில்பாலாஜி, என்னைப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார். தற்போது, தி.மு.க.,வுக்கு தாவி என்னை வசை பாடுகிறார். அவர் மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டுள்ளன. கலெக்டர் அன்பழகனை மிரட்டிய புகாரில், என்ன நடக்கும் என தெரியாது. என் வயதில் பாதி கூட, செந்தில்பாலாஜியின் அரசியல் அனுபவம் கிடையாது. அ.தி.மு.க.,வில் அமைச்சராக இருந்து கொள்ளையடித்த பணத்தை, அ.தி.மு.க.,வுக்கு எதி ராக செலவு செய்கிறார். அதை எந்த ஒரு, அ.தி.மு.க., தொண்டனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். அரவக்குறிச்சி தொகுதியில், செந்தில்பாலாஜி ஒரு போதும் வெற்றி பெற முடியாது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பா.ஜ., தொகுதி பொறுப்பாளர் சிவசாமி, பா.ம.க., மாநில துணை பொதுச்செயலாளர் பாஸ்கரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X