பொது செய்தி

தமிழ்நாடு

4,181 ஓட்டுச்சாவடி பணியாளர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு

Added : ஏப் 17, 2019
Advertisement

கரூர்: மாவட்டத்தில், 4,181 ஓட்டுச்சாவடி பணியாளர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கரூர் மாவட்டத்தில், 1,031 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஓட்டுச்சாவடி மையத்திலும், ஒரு தலைமை அலுவலர், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் நிலை அலுவலர்கள், நியமிக்கப்படுவர். அதனடிப்படையில் ஒரு சட்டசபை தொகுதிக்கு ஒரு அனைத்து மகளிர் ஓட்டுச்சாவடி மையம், நான்கு மாதிரி ஓட்டுச்சாவடி மையம், என மொத்தம், 1,031 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இவற்றில், 4,181 பேர் பணிபுரிய உள்ளார்கள். இதுதவிர கூடுதலாக, 835 ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் என மொத்தம், 5,016 பேர் பணிபுரிகின்றனர். இதன்படி கரூர் கலெக்டர் அலுவலத்தில் மூன்றாம் கட்ட கணினி முறையிலான குலுக்கல், தேர்தல் நடத்தும் அலுவலர் அன்பழகன் முன்னிலையில் நடந்தது. அதனடிப்படையில், 4,181 பேர், எந்தெந்த ஓட்டுச்சாவடியில் பணிபுரிய வேண்டும் என தேர்வு செய்யப்பட்டனர். இது தொடர்பான ஆணைகள், மூடி முத்திரையிட்ட உரையிலிட்டு சம்பந்தப்பட்ட தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அனுப்பிவைக்கபட உள்ளது. இன்று நடக்கவுள்ள கடைசி கட்ட பயிற்சி வகுப்பில் முத்திரையிடப்பட்ட உரை பிரிக்கப்பட்டு ஆணை வழங்கப்படவுள்ளது. இதன் பிறகே ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் பிற அலுவலர்கள் எந்தெந்த ஓட்டுச்சாவடியில் பணிபுரிய வேண்டும் என்பது தெரியவரும். மேலும் கரூர் மாவட்டத்தில், 1,031 ஓட்டுச்சாவடிகளிலும், கரூர் சட்டசபை தொகுதிக்கு, 22, அரவக்குறிச்சி தொகுதிக்கு, 22, கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு, 23, குளித்தலை தொகுதிக்கு, 24 என, 91 மண்டல அலுவலர்கள் பணிபுரிய உள்ளனர். இவர்களுக்கு உதவியாக மூன்று உதவியாளர்கள் மற்றும் காவலர்கள் பணிபுரிவர். இவர்களுடன், 91 ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சமபந்தப்பட்டஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளன. இந்த வாகனங்கள், குறிப்பிட்ட ஓட்டுச் சாவடிகளுக்குதான் செல்கிறதா என, கட்டுபாட்டு அறையிலிருந்து கண்காணிக்கப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X