பொது செய்தி

தமிழ்நாடு

ஜனநாயகம் எங்கே? தி.மு.க., - எம்.பி., விரக்தி

Added : ஏப் 17, 2019
Advertisement

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சியில், கரூர் லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணி காங்., வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து, தி.மு.க. எம்.பி., திருச்சி சிவா பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது: இந்திய நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என, தீர்ப்பளிக்கும் முடிவு உங்கள் கையில் இருப்பதால், மதச் சார்பற்ற கூட்டணி வேட்பாளராக ஜோதிமணியை முன் நிறுத்தியுள்ளோம். அந்த ஒருநாள் ஒருநிமிடம் நீங்கள் எடுக்கப்போகும் முடிவு தான், எதிர்கால இந்தியா ஜனநாயக நாடாக தொடரப்போகிறதா, இல்லையா என்று முடிவாகும். உங்கள் வீட்டு பிள்ளைகள் நாளை எப்படி வாழப்போகிறார்கள் என்பது முடிவாகும். இந்த ஜனநாயக நாட்டில் சட்டசபை, லோக்சபாவில், பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்கிறார்கள். ஆணுக்கு, பெண் சரிநிகர் சமம் என்கிறார்கள். ஆனால் ஒரு பெண் தேர்தலில் போட்டியிடும்போது, பாதுகாப்பு தரவேண்டிய அதிகார வர்க்கமே அவரை மிரட்டுகிறது. சட்டரீதியாக ஓரிடத்தில் பேசுவதற்கு அனுமதி பெற்ற பின், முறைகேடாக அதை மாற்றி ஆளும் கட்சிக்கு சாதகமாக அனுமதி தருகின்றனர். ஒரு பெண்ணுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை. உலகிலேயே பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்கிறார்கள். அதற்கு உதாரணம் தான், ஒரு பெரிய கட்சியில், பெரிய கூட்டணியில் லோக்சபா வேட்பாளராக உள்ள பெண்மணி மிரட்டப்படுவது. இந்த நாட்டில் ஜனநாயகம் எங்கே எப்படி செயல்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X