பொது செய்தி

தமிழ்நாடு

அதிகாரிகள் கவனத்திற்கு - கரூர்

Added : ஏப் 17, 2019
Advertisement

சாலையில் பறக்கும் குப்பை: பிரம்மதீர்த்தம் சாலையில் போதுமான குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இருக்கும் ஒரு தொட்டியும் நிரப்பி, சாலையில் குப்பை சிதறி கிடக்கிறது. காற்று வேகமாக வீசும் போது, சாலை முழுவதும் குப்பை சிதறி கிடக்கிறது. கடும் துர்நாற்றம் வீசுவதால், வாகன ஓட்டிகள் மூக்கை பொத்தியபடி, சாலையை கடக்க வேண்டியுள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது. சாலையோரத்தில், போதுமான குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும்.
பாதாள சாக்கடை மூடி உடைப்பு: ராமகிருஷ்ணபுரம் சாலையில், பாதாள சாக்கடை இணைப்பு மூடி உடைந்துள்ளது. இதனால், அவ்வழியாக வாகனங்களில் செல்வோர் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர். ஏற்கனவே அமைத்த பாதாள சாக்கடை தொட்டிகள், சாலையை விட உயரமாக அல்லது தாழ்வாக உள்ளன. குழியாக இருக்கும் தொட்டி மூடிகள் உடைந்து விடுகின்றன. இதனால், சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், குழிக்குள் விட்டு, நிலை தடுமாறி விழும் நிலை ஏற்படுகிறது. தொட்டியை சரிசெய்ய வேண்டும்.

சேதமான சாலை; பயணிகள் தவிப்பு: செங்குந்தபுரம் பகுதியில், சாலை குண்டும், குழியுமாக உள்ளது. அப்பகுதியில், பொதுமக்களால் நடந்து கூட செல்ல முடிவதில்லை. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள், பெரும் அவதிப்படுகின்றனர். சாலையை சீரமைக்கக்கோரி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. அதிக வாகனங்கள் சென்று வரும் செங்குத்தபுரம் பகுதியில், குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டியது அவசியம்.

சாலை தடுப்பு சுவர் சேதம்: ஜவஹர் பஜாரில் உள்ள தாலுகா அலுவலகம் முன், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, சாலை நடுவே தடுப்புச் சுவர் கட்டப்பட்டுள்ளது. தற்போது, பல இடங்களில் தடுப்புச் சுவர் உடைந்து, சேதமடைந்த நிலையில் உள்ளது. அதில், வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாவது அடிக்கடி நடக்கிறது. சுவர் உடைப்பை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக உள்ளனர். தடுப்பு சுவர்கள் மேலும் உடையும் முன் சீரமைக்க வேண்டும்.

பயன்பாடில்லாத குடிநீர் தொட்டி: பெரியாண்டாங்கோவிலில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. போர்வெல் மூலம் சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்பட்டது. வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறு வறண்டு விட்டதால், சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுவதில்லை. இதனால் பயன்படாத நிலையில் குடிநீர் தொட்டி உள்ளது. மாற்று குழாய் மூலம், தொட்டியில் தண்ணீர் நிரப்பினால் இப்பகுதி மக்களின் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னை தீரும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X