ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு

Added : ஏப் 17, 2019

நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு ஆகிய, சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மையங்கள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பாதுகாப்பாக வைப்பதற்கான உறுதியான அறையில் (ஸ்ட்ராங் ரூம்) ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு கருவி, 'விவிபேட்' இயந்திரம் ஆகியவற்றை, ஓட்டுச்சாவடி எண் வரிசைப்படி வைப்பதற்காக, அளவீடு செய்து, வரிசை குறிக்கப்பட்டுள்ளது. உறுதியான அறையில், ஜன்னல்கள் பாதுகாப்பாக சீலிடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளதையும், உறுதியான அறைக்கு எதிரே, அறைக்குள் சென்று வரும் நபர்களை வீடியோ பதிவு செய்ய, கேமரா பொருத்தப்பட்டிருப்பதையும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஆசியா மரியம், தேர்தல் பொதுப்பார்வையாளர் வாணிமோகன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும், ஓட்டு எண்ணும் அறையில், வேட்பாளர்களின் முகவர்கள், பார்வையிடுவதற்காக கம்பி வலை அமைத்து, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பது ஆகியவற்றையும், பார்வையிட்டனர். மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன், சப் - கலெக்டர் கிராந்திகுமார், ஆர்.டி.ஓ., மணிராஜ், உதவி தேர்தல் அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X