பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடிக்கு அனுப்பும் பொருட்கள் ஒருங்கிணைக்கும் பணி

Added : ஏப் 17, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தேர்தலை முன்னிட்டு, ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பப்படும் பொருட்களை, ஒருங்கிணைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணிகளை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான ஆசியா மரியம் நேற்று நேரில் ஆய்வு செய்தார். பென்சில், பால் பாயின்ட் பேனாக்கள், வெள்ளை தாள்கள், ஊசிகள், அரக்கு சீல் குச்சி, பசை பாட்டில், பிளேடு, மெழுகுவர்த்தி, நூல் கண்டு, மெட்டல் ரூல், பிரவுன் சீட், கார்பன் பேப்பர், பிளாஸ்டிக் கப், ரப்பர் பேண்டு, செலோ டேப், ஸ்டேம்ப் பேடு, இங்க் பாட்டில், டிராயிங் பின்கள், தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள், ஓட்டுச்சாவடிகளில் பயன்படுத்தபட உள்ளன. நாமக்கல் மற்றும் ராசிபுரம் தாலுகா அலுவலகம், சேந்தமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம் ஆகியவற்றில், ஓட்டுச் சாவடிகளுக்கு அனுப்பப்படும் எழுதுப்பொருட்களை ஒருங்கிணைக்கும் பணிகளை, தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வையிட்டார். தொடர்ந்து, சேந்தமங்கலம் தாலுகா, முத்துகாப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டுச்சாவடியை கண்காணிப்பதற்காக கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுகிறது. அதேபோல், முத்துகாப்பட்டி ஊராட்சி துவக்கப்பள்ளி ஓட்டுச்சாவடியில், அடிப்படை வசதிகள் முழுமையாக ஏற்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும், நேரில் பார்வையிட்டார். தாசில்தார்கள் சுப்ரமணி, செந்தில்குமார், அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X