பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.2,000 கோடியில் நாமக்கல் - திருச்சி நான்குவழி சாலை: அமைச்சர் தங்கமணி பேச்சு

Added : ஏப் 17, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ.,-தே.மு.தி.க.,-பா.ம.க.,-த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதன் வேட்பாளராக, காளியப்பன் போட்டியிடுகிறார். அவர், நாமக்கல் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலூர், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி சட்டசபை தொகுதிகளில், தனது கூட்டணி கட்சி ஆதரவாளர்களுடன் சென்று தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். நிறைவு நாளான நேற்று, நாமக்கல் நகரில் பிரசாரம் செய்தார்.
மணிக்கூண்டில் அமைச்சர் தங்கமணி, வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது: நாட்டுக்கு வலிமையான தலைவர் வேண்டும். பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்பதற்காக, பிரதமர் மோடிக்கு ஓட்டு கேட்கிறோம். ஆனால், எதிர் அணியினர் யார் பிரதமர் என, சொல்லாமல் தேர்தலை சந்திக்கின்றனர். எதிர் கூட்டணியில், ராகுல், மம்தா பானர்ஜி, சரத்பவார், மாயாவதி, சந்திரபாபுநாயுடு, சந்திரசேகரராவ், தேவகவுடா என, 10 பேர் பிரதமர் வேட்பாளர்களாக உள்ளனர். தமிழகத்திலேயே, மாநில நிதியில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டது நாமக்கல் மாவட்டத்தில்தான். நாமக்கல்-திருச்சி நான்கு வழிச்சாலை, 2,000 கோடி ரூபாயில் அமைய உள்ளது. நாமக்கல்லில் இருந்து ராசிபுரம் வழியாக சேலம் செல்லும், நான்கு வழிச்சாலை, திருச்செங்கோடு - ஓமலூர் நான்கு வழிச்சாலை, திருச்செங்கோடு-ஈரோடு நான்கு வழிச் சாலை என்று, பரிசீலிக்கப்பட்டு அப்ரூவல் வந்துவிட்டது. இரண்டு, மூன்று மாதங்களில், ஒப்பந்தம் விடப்பட்டு பணிகள் நடக்க இருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். எம்.எல்.ஏ., பாஸ்கர் மற்றும், அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X