பொது செய்தி

தமிழ்நாடு

பிரதான சாலையில் மின் விளக்கு அவசியம்

Added : ஏப் 17, 2019
Advertisement

ப.வேலூர்: ப.வேலூர் பஸ் ஸ்டாண்ட் - அண்ணாசிலை வரை சென்டர் மீடியன் உள்ளது. இதன் நடுவில் வாகன ஓட்டிகளின் வசதிக்காக, 10க்கும் மேற்பட்ட தெருவிளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இப்பகுதியில் ஏற்பட்ட விபத்துகளால், தெருவிளக்குகள் முற்றிலுமாக சேதமடைந்து, இரவு நேரத்தில் இருள் சூழ்ந்துள்ளது.
இதுகுறித்து அப்பகுதிமக்கள் கூறியதாவது: போக்குவரத்து மிகுதியான இந்த சாலையில், இரவு நேரத்தில் பஸ் ஸ்டாண்டிலுள்ள ஒரு உயர்கோபுர மின்விளக்கு மட்டுமே எரிகிறது. கடைக்காரர்கள் இரவு நேரத்தில், கடையை மூடும் வரை வெளிச்சம் இருக்கும். பின்னர் வயதான முதியவர்கள், நடந்து செல்பவர்கள் என அனைவரும் இருட்டில் நடந்து செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே, ஏற்கனவே இருந்தது போல தெருவிளக்குகள் அமைத்து, விபத்துகள் ஏற்படாத வகையில் சென்டர் மீடியனை உயர்த்த, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X