பொது செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.29 லட்சம் அதிரடி பறிமுதல்

Added : ஏப் 17, 2019
Advertisement

நாமக்கல்: வாகன சோதனையில், ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட, 3.29 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக்குழு, வீடியோ கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு மோகனூர் அடுத்த வளையப்பட்டி-காட்டுபுத்தூர் சாலை, அரூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக, ஹீரோ ?ஹாண்டா பைக்கில் வந்த, மோகனூரை சேர்ந்த சுரேந்திரன் என்பவர், வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அவரிடம், உரிய ஆவணங்கள் இன்றி, 2.69 லட்சம் ரூபாய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்தனர். அதேபோல், நாமக்கல் அடுத்த பொம்மம்பட்டி அல்லாபுரத்தை சேர்ந்தவர் விஜய், 25. அவர், நேற்று மாலை, 6:00 மணிக்கு மொபெட்டில், 60 ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொண்டு, நாமக்கல் நோக்கி வந்தார். காதப்பள்ளி பகுதியில் பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையிலான குழுவினர், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, எவ்வித ஆவணம் இன்றி, எடுத்து வந்த, 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்த பணம், மாவட்ட கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X