பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய ரூ.266 கோடி கேட்டு சுயேச்சை வேட்பாளர் மனு

Added : ஏப் 17, 2019
Advertisement

நாமக்கல்: நாமக்கல் லோக்சபா தொகுதியில், அகிம்சா சோசியலிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ரமேஷ், தொகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய, 266 கோடி கேட்டு, தேர்தல் ஆணையத்திடம் மனு வழங்க, ஒற்றை காலுடன் நடந்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வந்தார்.
அங்குள்ள அதிகாரிகளிடம், அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் லோக்சபா தொகுதியில் வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க., - தி.மு.க., - அ.ம.மு.க., கட்சியினர் பணம் வழங்கி வருகின்றனர். தேர்தல் ஆணையத்தால் இதை தடுக்க முடியவில்லை, யாரையும் பிடிக்கவும் இல்லை. தேர்தல் ஆணையம், ஜனநாயகத்தை காப்பதில் இருந்து தவறிவிட்டது. ஏற்கனவே நான், தேர்தல் செலவினங்களுக்காக, 50 லட்சம் ரூபாய் கடன், நாமக்கல் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் கேட்டேன். தேர்தல் செலவினங்களுக்காக, கடன் வழங்க சட்டத்தில் இடமில்லை என்று நிராகரித்து விட்டனர். இதையடுத்து, பொதுமக்களிடம் நிதி கேட்டு ஐந்து, 10 ரூபாய் என, பெற்று எளிமையாக தேர்தல் பிரசாரம் செய்கிறேன். ஆனால், மற்ற கட்சியினர் கறுப்பு பணம் மற்றும் தவறான பணத்தை கொண்டு தேர்தல் பிரசாரம் செய்கின்றனர். அவர்கள் பணம் கொடுத்து ஓட்டு பெறுகின்றனர். அவர்களோடு போட்டி போட்டு, உண்மையான ஜனநாயகம் ஜெயிக்காது. எனவே, ஜனநாயகத்தை காக்க, வாக்காளர்கள் வாக்களித்துவிட்டு வெளியே வந்து கையில் உள்ள மையை காட்டியவுடன், ஒருவருக்கு, 2,000 வீதம், 13 லட்சத்து, 29 ஆயிரம் பேருக்கு, 266 கோடி ரூபாய் வழங்க வேண்டும். அல்லது, வாக்காளர் ஓட்டுப்போட்ட ஓட்டை உறுதி செய்யும் வகையில் வழங்கும் வி.வி., பேடில் வெளியே வரும், 'ஓட்டு யாருக்கு அளித்தோம்' என்ற சின்னத்துடன் கூடிய உறுதி சீட்டு போலவே, அருகில், ஏ.டி.எம்., இயந்திரம் ஒன்றையும் வைத்து ஓட்டு போட்டவுடன், 2,000 ரூபாய் வெளியே வருமாறு செய்து கொடுத்து, 100 சதவீத ஓட்டுப்பதிவை உறுதி செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X