பொது செய்தி

தமிழ்நாடு

நாமக்கல்லில் அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி கட்சியினர் கடைசி கட்ட பிரசாரம்

Added : ஏப் 17, 2019
Advertisement

நாமக்கல்: தமிழகத்தில், லோக்சபா தேர்தல் நாளை நடக்கிறது. நாமக்கல் தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் காளியப்பன், தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க., வேட்பாளர் சின்ராஜ், அ.ம.மு.க., வேட்பாளர் சாமிநாதன், மக்கள் நீதி மைய வேட்பாளர் தங்கவேலு, சுயேச்சைகள் என, 29 பேர் போட்டியிடுகின்றனர். கடைசி நாளான நேற்று, மாவட்டம் முழுவதும் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் நகரில், கொ.ம.தே.க, வேட்பாளர் சின்ராஜ், தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்தை மேற்கொண்டார். அவரும், கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன், தி.மு.க., முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதைதொடர்ந்து, அ.தி.மு.க., வேட்பாளர் காளியப்பன், நாமக்கல் நகரில் வலம் வந்து, தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தினார். அமைச்சர் தங்கமணி, பொதுமக்களிடம், அரசின் திட்டங்களை எடுத்துக்கூறினார். எம்.எல்.ஏ., பாஸ்கர், தே.மு.தி.க., மாவட்ட செயலாளர் விஜயன், த.மா.கா., மாவட்ட தலைவர் இளங்கோ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். மக்கள் நீதி மையம், சுயேச்சை வேட்பாளர்களும் இறுதி கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X