கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வேலூர் தேர்தல் ரத்து : ஐகோர்ட்டில் அதிமுக வழக்கு

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (28)
Advertisement

சென்னை : வேலூர் லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தால் செய்யப்பட்டுள்ளது.





வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பி இருந்தது. இதனையடுத்து வேலூர் தொகுதியில் லோக்சபா தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷன், ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று (ஏப்.,16) உத்தரவிட்டார்.





இந்நிலையில் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். நாளை (ஏப்.,18) தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வேலூரில் தேர்தல் நடத்தவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு முன், இன்று (ஏப்.,17) காலை 10.30 மணிக்கு விசாரணைக்கு வர உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
arabuthamilan - Manama,பஹ்ரைன்
17-ஏப்-201916:29:41 IST Report Abuse
arabuthamilan கண்டைனர் பணம் அன்புநாதன் பணம் சேகர் ரெட்டி பணம்
Rate this:
Share this comment
Cancel
Ganesh G - Hyderabad,இந்தியா
17-ஏப்-201915:18:04 IST Report Abuse
Ganesh G 4 .30 மணிக்கு தீர்ப்பு. ஒருவேளை தி.மு.க. வேட்பாளரை தகுதி நீக்கம் செய்து தேர்தல் நடத்தலாம் என்று தீர்ப்பு வந்தால், விடிந்தால் தேர்தல்... அதுக்குள்ள எல்லா ஏற்பாடுகளும் தேர்தல் அதிகாரிகள் அனைத்து பூத்துகளிலும் செய்துவிடுவார்களா? தி.மு.க. இல்லாமல் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. விற்கு லாபம். சுலபமாக ஜெயித்து விடலாம். அதனால் தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்கிறது. இது ரொம்ப கேவலம். போட்டியில யாருமே இல்லைன்னா ஜெயித்தது என்ன பிரயோஜனம்? வீரனோடு மோதி ஜெயிக்கணும். நோஞ்சானோடு மோதி ஜெயிப்பதில் அர்த்தமில்லை.
Rate this:
Share this comment
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-ஏப்-201915:15:56 IST Report Abuse
அசோக்ராஜ் தேர்தல் சக்கரம் சுழலத் துவங்கிய பிறகு நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பது சட்டம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X