பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் மீனாட்சி திருக்கல்யாண கோலாகலம்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
மதுரை: மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரம் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மதுரை சித்திரை திருவிழா ஏப்.,7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை

மதுரை: மதுரையில் மீனாட்சி சுந்தரேஸ்வரம் திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.



latest tamil news


மதுரை சித்திரை திருவிழா ஏப்.,7 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். சித்திரை திருவிழாவின் 8 ம் நாளான ஏப்.,15 ம் தேதியன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெற்றது. ஏப்.,16 அன்று திக்விஜயம் நடைபெற்றது. 10 ம் நாள் திருவிழாவான இன்று (ஏப்.,17) மீனாட்சி - சுந்தரேஸ்வரருக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை கோயிலுக்கு வெளியிலும் உள்ள பக்தர்கள் காண வேண்டும் என்பதற்காக எல்இடி திரைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது.


latest tamil news



காலை 9.50 மணிக்கு மேல் 10.14 மணிக்கும் வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் முழங்க, ஆகம விதிப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டு, திருக்கல்யாண வைபவம் நடந்தது. மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வர் மணக்கோலத்தில் பிரியாவிடை அம்மனுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருக்கல்யாணத்தை காண வந்த பெண்கள், மீனாட்சி அம்மனுக்கு திருமாங்கல்யம் அணிவிக்கப்பட்ட போது, அவர்களும் தாலிக் கயிற்றை மாற்றிக் கொண்டனர். மீனாட்சி திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்கள் அனைவருக்கும் திருமண விருந்து அளிக்கப்பட்டது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
17-ஏப்-201922:36:33 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X