2ம் கட்ட தேர்தலில் 427 கோடீஸ்வர வேட்பாளர்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (12)
Advertisement

புதுடில்லி : நாளை நடைபெறும் லோக்சபா தேர்தல் 2ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 427 பேர் கோடீஸ்வரர்கள். ஜனநாயக சீர்திருத்த சங்கம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின் படி, 2 ம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சராசரி சொத்து மதிப்பு ரூ.3.9 கோடி.



தேசிய தேர்தல் கண்காணிப்பு குழு மற்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் இணைந்து வேட்பாளர்கள், தங்களின் வேட்புமனுவுடன் தாக்கல் செய்துள்ள சொத்து விபரங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரத்தை சேகரித்துள்ளன. இதன்படி, நாளை நாடு முழுவதும் 95 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் 1644 வேட்பாளர்களில் 1590 பேரின் சொத்துக்கள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 1590 பேரில் 209 பேர் தேசிய கட்சிகள், 107 பேர் மாநில கட்சியினர், 386 பேர் அங்கீகரிக்கப்படாத கட்சிகளை சேர்ந்தவர்கள். 888 பேர் சுயேட்சைகள்.



காங்., கட்சியின் 46 பேர், பா.ஜ.,வின் 45 பேர், திமுக.,வின் 23 பேர், அதிமுக,வின் 22 பேர், பகுஜன் சமாஜ் கட்சியின் 21 பேர் தங்களுக்கு ரூ.1 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாக அறிவித்துள்ளனர். 11 சதவீதம் வேட்பாளர்களுக்கு ரூ.5 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாகவும், 41 சதவீதம் வேட்பாளர்களுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கோடீஸ்வர வேட்பாளர்கள் பட்டியலில் கன்னியாகுமரி தொகுதி காங்., வேட்பாளர் வசந்தகுமார் முதலிடத்தில் உள்ளார். இவர் தனக்கு ரூ.471 கோடிக்கு மேல் சொத்து உள்ளதாக அறிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து பீகார் காங்., வேட்பாளர் உதய் சிங் (ரூ.341 கோடி) 2வது இடத்திலும், கர்நாடகாவில் தெற்கு பெங்களூரு காங்., வேட்பாளர் சுரேஷ் (ரூ.338 கோடி) 3வது இடத்திலும் உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkatan - Puducherry,இந்தியா
17-ஏப்-201917:00:31 IST Report Abuse
venkatan அட சர்வேஸ்வரா
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
17-ஏப்-201916:55:55 IST Report Abuse
Endrum Indian வேட்பாளர் என்ற தகுதிக்கு குறைந்த பட்சம் வேண்டிய சொத்து ரூ. 10 கோடிக்கு மேல், அதுவும் பணம் கொடுக்காமல் ஜெயிக்க நினைத்தால் , அதுவே பணம் கொடுத்துத்தான் ஜெயிப்பேன் என்றால் நிச்சயம் ரூ 100 கோடி குறைந்த பட்சம் இருக்கவேண்டும். 8 லட்சம் ஒரு தொகுதிக்கு, 70% ஒட்டு, 5.6 லட்சம் வோட்டளிப்பவர்கள், ஆகவே குறைந்தது 2.50 லட்சம் வோட்டு ஒரு வோட்டு ரூ 1000 கொடுத்தால் கூட ரூ. 25 கோடி பணால் .
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஏப்-201915:04:00 IST Report Abuse
இந்தியன் kumar பரம்பரை பணக்காரனா திடீர் பணக்காரனா என்று பாருங்கள் திடீர் பணக்காரன் ஆக இருந்தால் நிச்சயமாக நல்ல தொழில் செய்து பணக்காரன் ஆகி இருக்க முடியாது ,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X