தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (1)

சென்னை: சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: வடக்கு உள்கர்நாடகா முதல் குமரி கடல் வரை வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தின் உள்மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி மின்னலுடன் சூறைக்காற்றுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.




கோடை மழை


திருநெல்வேலி, கொடைக்கானல், நீலகிரி, ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறையில் இடியுடன் மழை பெய்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X