அரசியல் செய்தி

தமிழ்நாடு

சோதனை திட்டமிட்ட சதி: தங்கதமிழ்செல்வன்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (20)
Advertisement
சதி, தங்கதமிழ்செல்வன், அமமுக, தேர்தல்

தேனி: ஆண்டிப்பட்டியில் அமமுக கட்சியினர் பணம் பதுக்கி வைத்திருந்ததாக சோதனை நடத்த சென்றபோது வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவம் தேனியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக அமமுக வேட்பாளர் தங்கதமிழ்செல்வன் இன்று நிருபர்களிடம் பேசுகையில்; வருமானவரி துறையினர் திட்டமிட்டு நடத்தும் சதி. துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கட்டுப்பாட்டில் உள்ள போலீசாரின் ஆட்டம் நடக்கிறது. அதிமுக வும், தேர்தல்ஆணையமும் இணைந்து நாடகம் நடத்துகிறது. பணம் எனது கட்சிக்காரர் வீட்டில் இருந்து கைப்பற்றப்படவில்லை.
அதிமுக அலுவலகத்தில் நாங்கள் பணத்தை வைப்போமா? அதிமுக பிரமுகர் அமரேஷ் கட்டடத்தில் பணத்தை வைக்க நாங்கள் முட்டாளா ? தோல்வி பயம் காரணமாத்தான் சோதனை நடக்கிறது. இதன் காரணமாக எங்களுக்கு பாதிப்பு இல்லை. சாதகமாகத்தான் அமையும்.
எந்த வழக்கு பதிந்தாலும் சந்திக்க தயார். தொகுதி முழுவதும் பார்லி., தொகுதிக்கு ஒரு ஓட்டுக்கு ஆயிரம், சட்டசபை தொகுதிக்கு ஒரு ஓட்டுக்கு 2 ஆயிரம் வழங்கியுள்ளனர். பணம் கொடுத்த ஆதாரம் எங்களிடம் உள்ளது. இவர்களை போலீசார் கைது செய்ய தயாரா ? இவ்வாறு தங்க தமிழ்செல்வன் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-ஏப்-201920:07:49 IST Report Abuse
அசோக்ராஜ் ஏன் இதோடு நிறுத்திட்டீங்க?
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201916:42:56 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் உங்க கூட இருக்கும் ஒருவன் தான் போட்டுகொடுத்திருக்கிறான். இதில் என்ன சந்தேகம்.
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
17-ஏப்-201915:45:55 IST Report Abuse
Rengaraj தேர்தல் கமிஷனை எப்போதும் எல்லா கட்சிகளும் விரோதிகளாகத்தான் பார்க்கின்றன. அது தன்னுடைய வேலையை செய்தாலும் செய்யாவிட்டாலும் குறைகூறுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். தேர்தல் கமிஷனுக்கு ஆளும் கட்சி எதிர் கட்சி எல்லாம் ஒன்றுதான். அவர்கள் எப்போதும் எல்லா கட்சிகளையும் சந்தித்துதான் ஆக வேண்டும். வழக்கு என்று வந்து விட்டால் அது உச்ச நீதி மன்றம் வரை செல்லக்கூடியது. அப்படி சென்றால் அவர்களுக்கு எந்த கட்சியும் உதவாது. இது கமிஷன் அதிகாரிகளுக்கும் மற்றும் பிற கட்சிகளுக்கும் ஏன் விவரம் அறிந்த நம் மக்களுக்கும் தெரியாதா என்ன?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X