அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் ஏற்பாடுகள் தயார்; தேர்தல் அதிகாரி

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (3)
Advertisement

சென்னை: தமிழகத்தில் நாளை ( 18 ம் தேதி ) நடக்கவிருக்கும் ஓட்டுப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஷாஹூ கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் இன்று நிருபர்களிடம் மேலும் கூறியதாவது:
ஓட்டுச்சாவடிகளில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. போலீசார், துணை ராணுவ படையினர், ஓய்வு பெற்ற போலீசார் என பலர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஓட்டுப்பதிவு வெப்காஸ்டிங் உள்ளிட்ட 4 தொழில்நுட்ப வழிமுறைகள் மூலம் தேர்தல் கண்காணிக்கப்படும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் ஓட்டுப்பதிவு நடக்கும். மதுரையில் இரவு 8 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கிறது.


இது வரை 4,400 எப்.ஐ.ஆர்


வேலூரில், கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்தப்படுகிறது. ஆனால் ஆளும்கட்சியினர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை இல்லையே என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அதிகாரி; இது வரை 4,400 எப்.ஐ.ஆர்., பதிவு செய்துள்ளோம். புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வருமான வரித்துறையினர் , பார்வையாளர் ரிப்போர்ட்டின்படி, செலவின பார்வையாளர்கள் அளிக்கும் அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் பாரபட்சம் இல்லை. எம்.எல்.ஏ., விடுதியில் கூட ரெய்டு நடத்தப்பட்டது. மாவட்ட கலெக்டருக்கு வந்த புகாரின் அடிப்படையிலேயே கனிமொழி வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டுள்ளது.

நேற்று இரவில் ஆண்டிப்பட்டியில் சோதனை நடந்தது. முழு ரிப்போர்ட் வரவில்லை. வந்த பின் உரிய முடிவுகள் எடுக்கப்படும். தமிழகத்தில் 12 லட்சம் பேர் முதல் முறையாக ஓட்டளிக்கும் இளைய தலைமுறை வாக்காளர்கள் உள்ளனர். அனைவரும் தவறாமல் அச்சமின்றி ஓட்டளிக்க வர வேண்டும். இவ்வாறு சாஹூ கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jysen - Madurai,இந்தியா
17-ஏப்-201919:21:44 IST Report Abuse
jysen The EC has always been a toothless, spineless and worthless organisation. When the dates of election are announced both the state and central government should be dismissed and the political parties should be allowed to fight on equal footing but now the ruling party is given all the unfair and unduly advantages and the opposition parties have no armour or shield. The tem helps those who are in power. This unfair advantage to the ruling class should be put an .
Rate this:
Share this comment
Cancel
Rengaraj - Madurai,இந்தியா
17-ஏப்-201916:21:54 IST Report Abuse
Rengaraj சாதாரணமாக ஒரு அபார்ட்மெண்ட் அசோசியேசன் தேர்தலுக்கே சில பிரச்சினைகளை சந்திக்கும்போது ஒரு மாநிலத்தில் ஜன நாயக ரீதியில் தேர்தல் நடத்துவது என்பது மிகவும் பெரிய காரியம். நாம் தேர்தல் கமிஷனை பாராட்ட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-ஏப்-201914:53:06 IST Report Abuse
இந்தியன் kumar வாக்குரிமை நமது உரிமை அதை யாருக்கும் விற்க கூடாது அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் அடுத்த தேர்தலில் இந்தியாவில் எங்கிருந்தாலும் வாக்களிக்கலாம் என்கிற நிலை உருவாக்கப்பட வேண்டும். தமிழ் நாட்டில் நிறைய வட மாநிலத்தவர்கள் உள்ளார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X