மோடி அறிமுகப்படுத்தும் 25 புதுமுகம்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (42)
Advertisement

புதுடில்லி: வரும் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கை பிரதமர் மோடிக்கு உள்ளது. 12 மாநிலங்களில் 35 பொதுக்கூட்டங்களில் பேசினார் மோடி. அங்கெல்லாம் 2014ஐ விட பெருங்கூட்டம் கூடியது. இதைப் பார்த்து தான் மோடி இந்த முடிவுக்கு வந்தார்.


நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்துவந்த மோடி, சில நாட்களாக அமித்ஷா, ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி, சுஷ்மா ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.இதற்கிடையில் பல்வேறு டிவி சேனல்கள், நாளிதழ்களுக்கு பேட்டியும் அளித்தார். எல்லாவற்றிலும் அவர், ‛‛மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி'' என்று கூறி உள்ளார்.
மெகா திட்டம்:
ஆட்சிக்கு வந்தால் அமைக்க வேண்டிய அமைச்சரவை பற்றியும் ஆலோசிக்க துவங்கி உள்ளார் என விபரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பல துறைகளில் இளைஞர்களையும் புதுமுகங்களையும் கொண்டு வர அவர் முடிவு செய்துள்ளார்.



அமித்ஷா அமைச்சராக மாட்டார்கள் என்கிறார்கள். கட்சி தலைவராகவே அவர் நீடிக்கலாம்.மீண்டும் தேர்தலில் போட்டியிடாத சுஷ்மா, அமெரிக்காவுக்கான இந்திய துாதராக நியமிக்கப்படலாம். உள்துறை அமைச்சராக ராஜ்நாத் நீடிப்பார்.
அருண் ஜெட்லி அமைச்சராக நீடித்தாலும் நிதிக்குப் பதில் வெளியுறவு போன்ற எளிதான துறை தரப்படலாம்.
ராணுவ அமைச்சராக நிதினும், நிதிக்கு பியூஸ் கோயலும் நியமிக்கப்படலாம். நிர்மலா சீதாராமனுக்கு வேறு துறை ஒதுக்கப்படலாம்.



மத்திய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை வாரணாசியில் கங்கை கரையில் நடத்தும் திட்டமும் உள்ளது. புதுடில்லிக்கு வெளியே அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை நடத்த வேண்டும் என்று மோடி நினைப்பது தான் இதற்கு காரணம்.
மாநில கவர்னர்களும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது ஆர்.எஸ்.எஸ்.,சை சேர்ந்த 14 பேர் கவர்னர்களாக உள்ளனர்.



ஆலோசகர் யார்:
பிரதமரின் முதன்மை ஆலோசகராக ஹஸ்முக் ஆதியா நியமிக்கப்படலாம். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யார் என்ற பேச்சும் எழுந்துள்ளது.
மோடிக்கு இணையான ஒரு தலைவரை எதிர்க்கட்சிகள் அடையாளம் காட்ட முடியவில்லை. பிரசாரத்திலும் அவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்கின்றனர். இதுபோன்ற காரணங்களால் மீண்டும் ஆட்சிக்கு வருவது உறுதி என்று பா.ஜ., நினைக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
18-ஏப்-201903:52:06 IST Report Abuse
J.V. Iyer உண்மையே வெல்லும். வாய்மையே வெல்லும். பாஜகவே வெல்லும். மீண்டும் பிரதமராக மோடிஜி நிரந்தர பிரதமராக மோடிஜி. நிரந்தர குடும்ப அரசியல் வாரிசு காங்கிரஸ் கட்சி தலைவராக பாப்பு
Rate this:
Share this comment
Cancel
Vel Murugan - Hyderabad,இந்தியா
17-ஏப்-201920:29:47 IST Report Abuse
Vel Murugan மிக நீண்ட நாட்களுக்குப்பின் ஒரு நல்ல திறமையான , தூய்மையான ,தைரியமான பிரதமர் நமது மோடி அவர்கள். சகோதரர்களே, நண்பர்களே நினைத்துப்பாருங்கள் .அற்புதமான வரும்கால திட்டங்கள். வருங்களா இளைஞர்களை நல்வழிப்படுத்தும் திட்டம்.பிஜேபி யின் தேர்தல் திட்டங்களை படியுங்கள்.குண்டு சட்டிக்குள் குதிரை ஓடின காலம் போதும்.கண் திறந்து பாருங்கள். இந்த மண் உள்ளவரை என்றும் நினைவில் இருக்கும் பெப்ரவரி26 -2019 ,palakot விமான தாக்குதல் . பிஜேபி அரசின் ஒரு மிக துணிச்சலான, இந்தியர் அனைவரையும் நிமிர்ந்து நிற்கவைத்து ,உலகமே அதிர்ந்து நின்று திரும்பிப்பார்த்து. இதற்க்காகவாவது நாம் நிச்சயம் பிஜேபிக்கு ஓட்டு போடவேண்டும்.நிலையான ,ஊழலற்ற,திறமையா ,நாட்டின் எதிர்காலத்தை பற்றி அக்கறை கொண்ட இந்த ஆட்சி நிச்சயம் தொடரும்.ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Cancel
RM -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201920:26:41 IST Report Abuse
RM
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X