திக்விஜயை திக்குமுக்காட செய்வாரா சாத்வி?

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (34)
Advertisement
பா.ஜ., பாஜ, காங்கிரஸ், காங்., திக்விஜய், திக்விஜய் சிங், சாத்வி, சாத்வி பிரக்யாசிங் தாகூர், போபால்,

புதுடில்லி: 2008 ம் ஆண்டு நடந்த மாலேகான் குண்டுவெடிப்பி்ல் குற்றம்சாட்டப்பட்டவர் சாத்வி பிரக்யாசிங் தாகூர். இவர் பா.ஜ.,வில் இணைந்து விட்டார். முன்னாள் ம.பி., முதல்வரும் காங்., மூத்த தலைவருமான திக்விஜய் சிங்கை எதிர்த்து போபால் தொகுதியில் சாத்வியை பா.ஜ., நிறுத்தியுள்ளது.
ம.பி., தலைவநகர் போபால். இங்கு 1989 முதல் பா.ஜ., வெற்றி பெற்று வருகிறது. கடைசியாக இங்கு 1984ல் தான் காங்., வெற்றி பெற்றது.தற்போது இங்கு காங்., சார்பில் திக்விஜய் போட்டியிடுகிறார். இங்கு பா.ஜ., சார்பில் சாத்வி நிறுத்தப்பட்டுள்ளதால் திக்விஜய் நிலைமை சிக்கலாகி விடும் என்கிறார்கள் அம்மாநில பா.ஜ., கட்சியினர்.

சாத்வி ஒரு இந்து தீவிரவாதி என்று காங்., கட்சியினர் குற்றம்சாட்டினர். இந்த வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம். ஆனால் மாலேகான் குண்டுவெடிப்பில் சாத்வி குற்றம் அற்றவர் விசாரணை நடத்திய தேசிய புலனாய் ஏஜென்சி கூறியது. இருப்பினும் வழக்கில் இருந்து சாத்வி விடுவிக்கப்படவில்லை. அவர் தற்போது ஜாமினில் உள்ளார்.
சாத்வி கூறும்போது, ‛‛மன்மோகன் சிங் அரசில் வழக்கு விசாரணையின் போது நான் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டேன்'' என்று குற்றசாட்டி இருந்தார். இதனாலேயே சாத்வியால் இப்போதும் சரியாக நடக்க முடியாது.





திக்விஜயை சாத்வி எதிர்ப்பது ஏன்


குண்டுவெடிப்பு வழக்கில் 8 ஆண்டுகள் சிறையில் இருந்ததற்கு காரணம் திக்விஜய் தான். திக்விஜய் ஒரு இந்து விரோதி என்று சாத்வி நினைக்கிறார். மாலேகான் குண்டு வெடிப்பு நடந்ததும், இந்து தீவிரவாதம் துவங்கி விட்டது என்று புகார் கூறியவர் திக்விஜய்.லோக்சபா தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று திக்விஜய் கேட்டதுமே, கடினமான ஒரு தொகுதியில் தான் நீங்கள் போட்டியிட வேண்டும் என்று கூறிய ம.பி., முதல்வர் கமல்நாத், போபாலை திக்விஜயிடம் கொடுத்து விட்டார்.





சாத்வி யார்


சாத்வி, ம.பி., மாநிலம் பிந்த் மாவட்டத்தில் லஹர் என்ற இடத்தில் பிறந்தார். வரலாறு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். படிக்கும்போதே ஆஸ்.எஸ்.எஸ்., உடன் தொடர்புள்ள மாணவர்கள் அமைப்பான ஏ.பி.வி.பி மற்றும் பெண்கள் அமைப்பான துர்கா வாஹிணி ஆகிய அமைப்புகளில் பணியாற்றினார். ஆவேசமாக பேசக் கூடியவர்.இப்போது பா.ஜ.,வில் சேர்ந்து முழு அரசியல்வாதியாகி விட்டார். திக்விஜய்க்கு இவர் சரியான போட்டியை தருவார் என எதிர்பார்க்கின்றனர்.




Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-201909:26:00 IST Report Abuse
sundar
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
18-ஏப்-201905:37:13 IST Report Abuse
Rajavel
Rate this:
Share this comment
Cancel
Rajavel - Ariyalur,இந்தியா
18-ஏப்-201905:31:22 IST Report Abuse
Rajavel எல்லா கற்பழிப்பு , கொலை , குண்டுவெடிப்பு குற்றவாளிகளும் RSS , பிஜேபியில். இதுவே ஒரு முஸ்லீம் மீது இத்தகைய குற்றசாட்டு இருந்தால் அவன் வாழ்நாள் முழுவதும் ஜெயிலில். பிஜேபி, RSS ஆட்சியில் ஜனநாயகம் அந்தோ பரிதாபம்
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201908:57:08 IST Report Abuse
Swaminathan Nathகுற்றம் இல்லை என கோர்ட் சொல்லி விட்டது,...
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201908:59:49 IST Report Abuse
Swaminathan Nathகாங்கிரஸ் , தவறான பொய் குற்ற சாட்டு சொல்லி இவர்களை கைது செய்தது, மக்கள் அதற்கு தக்க படம் புகட்டுவார்கள்,...
Rate this:
Share this comment
Swaminathan Nath - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201909:01:10 IST Report Abuse
Swaminathan Nathமத ரீதியாக குண்டு வைக்க பழக்க பட்டவர்கள் ,யார் என்பது உலகிற்கு தெரியும், சில தீவிரவாத இயக்கங்கள் ஒழிக்க பட வேண்டும், அப்பாவிகள் தண்டிக்க கூடாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X