சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாத்தூர் அமமுக வேட்பாளர் வீட்டில் ஐ.டி ரெய்டு

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சாத்தூர்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமுமுக வேட்பாளர் சுப்ரமணியன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்தது.. ஏற்கனவே சுப்ரமணியன் அலுவலகம் மற்றும் தோட்டத்தில் ரூ.43 லட்சம் பறிமுதல் செய்துள்ள நிலையில் சோதனை நடந்தது.

சாத்தூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் சுப்ரமணியன் என்பவர் போட்டியிடுகிறார். அவரது உறவினர் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் இன்று பிற்பகலில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ரூ.10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து சுப்பிரமணியனின் தோட்டத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதில் பம்பு செட் பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
17-ஏப்-201919:53:03 IST Report Abuse
அசோக்ராஜ் இப்படியே போனால் 21- சட்டசபை தொகுதிகளிலும் பணம் பிடித்து ரிப்போர்ட் செய்து தேர்தலை ரத்து செய்து விடலாம்.
Rate this:
Share this comment
Cancel
Mano - Dammam,சவுதி அரேபியா
17-ஏப்-201918:07:36 IST Report Abuse
Mano வோட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X