கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வேலூர் தேர்தல் ரத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (11+ 75)
Advertisement
வேலூர், தேர்தல், சென்னை ஐகோர்ட், சண்முகம்

சென்னை : வேலூர் லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.
வேலூர் மாவட்டம் காட்பாடி உள்ளிட்ட பகுதிகளில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை தொடர்பாக தேர்தல் கமிஷனுக்கு வருமானவரித்துறை அறிக்கை அனுப்பி இருந்தது. இதனையடுத்து வேலூர் தொகுதியில் லோக்சபா தேர்தலை ரத்து செய்யக்கோரி தேர்தல் கமிஷன், ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது. இதன் அடிப்படையில் வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலை ரத்து செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று (ஏப்.,16) உத்தரவிட்டார்.




இந்நிலையில் வேலூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வேலூர் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் உள்ளிட்டோர் தேர்தலை நடத்த வேண்டும் எனக்கோரி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு இன்று காலை அவசரமாக விசாரணை நடத்தியது. இதில், ஏ.சி.சண்முகம், சுயேட்சை, தேர்தல் ஆணைய தரப்பினரின் வாதங்கள் முடிந்த நிலையில், தேர்தலை ரத்து செய்ததற்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், வேலூர் தொகுதி லோக்சபா தேர்தலை ரத்து செய்தது சரிதான். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையில் கோர்ட் தலையிட முடியாது எனக்கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (11+ 75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
18-ஏப்-201901:03:18 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam திமுக தனது செயலால், தங்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதாகத் தோன்றுகின்றது. அதாவது, திமுக நீதிமன்றத்தை அணுகவில்லை.
Rate this:
Share this comment
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
17-ஏப்-201921:28:43 IST Report Abuse
M.COM.N.K.K. இந்தியாவில் தனி மனிதன் பாதிக்கப்படும்போது அந்த மனிதனின் கடைசியாக நம்புவது நீதிமன்றம்தான் அந்த நீதிமன்றம் விசாரணை செய்து தேர்தல் ஆணையத்திற்கு தகுந்த ஆலோசனைகளை வழங்கலாம் அதில் எந்த தவறுமில்லை தேர்தல் ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தை பெற்றுள்ளது உண்மைதான் இருந்தாலும் தேர்தல் ஆணையம் சில நேரங்களில் தவறு செய்தால் அதை கேட்பதற்கு யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை இந்திய மக்கள்தான் முடிவுசெய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
17-ஏப்-201921:07:48 IST Report Abuse
Swaminathan Chandramouli குற்றவாளி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். பணத்தை பதுக்கியவர் அவரும் அவருடைய தகப்பனாரும் ஆதலால் கதிர் ஆனந்தை மட்டும் தேர்தலில் போட்டி இடுவதை ரத்துசெய்யவேண்டும் மற்ற வேட்பாளர்கள் என்ன பாவம் செய்தார்கள் ?திருடனை மட்டும் கைது செய்யாமல் அவனை பிடிக்க ஓடினவர்களையும் கைது செய்தால் என்ன அர்த்தம் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X