பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் இதுவரையில் ரூ. 2,628 கோடி பணம் பறிமுதல்: தொடர்ந்து தமிழகம் முதலிடம்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (12)
Advertisement
பணம் பறிமுதல் தமிழகம் 'டாப்'

புதுடில்லி : லோக்சபா தேர்தலையொட்டி, நாடு முழுவதும் இதுவரை ரூ.2,628.43 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ. 514.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.







தமிழகம் டாப்


இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் பறக்கும்படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.2,628.43 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.


உத்தரவு



முன்னதாக ஊடக செய்திகள், பல்வேறு புகார் வந்ததன் அடிப்படையில் தமிழகத்தில் தேர்தல் நடத்த முடியாத தொகுதிகள் எவை? என விரிவான அறிக்கை அனுப்பி வைக்க தமிழக தேர்தல் ஆணையருக்கு , தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது..

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
18-ஏப்-201904:49:18 IST Report Abuse
Palanisamy T இதுநாள்வரை திராவிடக் கட்சிகள் தமிழகத்தை ஆளவந்தார்களா அல்லது கொள்ளை அடிக்க வந்தார்களா? மக்களைப் பற்றியக் கவலைகள் கொஞ்சமுமில்லை அமைச்சர்கள் அனைவரும் தங்களின் சொந்தக் குடும்ப நலனுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கின்றார்கள் தமிழ் கல்வி வளர்ச்சி, மக்களின் வளர்ச்சிப் பற்றியும் இவர்களிடம் கொஞ்சமுமில்லை மாநிலத்தில் கல்வி வளர்ச்சிப் பற்றால் மக்களின் வளர்ச்சி தானாகவே உயரும் இவர்களே இப்படியென்றால் இவர்களிடம் கூட்டுச் சேர்ந்தக் கட்சிகளும் உருப்படியானக் கட்சிகளா ஈவெரா அண்ணா, எம்ஜிஆர் பேரையும் முற்றாக நாசம் செய்துவிட்டார்கள்
Rate this:
Share this comment
Cancel
Ramasami Venkatesan - Chennai - now in Brisbane - Aus,இந்தியா
18-ஏப்-201903:05:00 IST Report Abuse
Ramasami Venkatesan தங்கம், வெள்ளி பறிமுதல் செய்தது வேண்டுமானால் கடத்தலாக இருக்கலாம். ஆனால் இவ்வளவு புது நோட்டு கருப்பு பணம் எப்படி வந்தது. அப்போ எவ்வளவு செல்லா நோட்டுகள் பின்வாசல் வழியாக இவர்கள் மாற்றி இருப்பார்கள். அப்போது பாமர மக்கள் க்யூவில் நின்று மாற்ற முடியாமல் புது பண தட்டுப்பாட்டில் விரக்தி அடைந்தது இன்று புரிகிறதா. Oruvar கருப்பு பணத்தை ஒழிக்க முழு முயற்சி எடுக்கிறார் மற்றவர்கள் சுயநலவாதிகள் இப்படி தோற்கடித்து மக்களை திசை திருப்புகிறார்கள். இப்படி இருக்க இதை முழுவதும் ஒழிக்க ஒரு நேர்மையான தைரியசாலி தலைமை வேண்டும் மேலும் அவருக்கு வருடங்கள் தேவைப்படும். மக்கள் பொறுப்பு கடமை கூடுகிறது நாட்டின் நலனுக்காக.
Rate this:
Share this comment
Cancel
Vel Murugan - Hyderabad,இந்தியா
17-ஏப்-201922:22:26 IST Report Abuse
Vel Murugan மிக நீண்ட நாட்களுக்குப் பின் ஒரு நல்ல திறமையான , தூய்மையான ,தைரியமான பிரதமர் நமது மோடி அவர்கள். மோடியின் ஊழலற்ற, திறமையான ,நாட்டின் எதிர்காலத்தை பற்றி அக்கறை கொண்ட இந்த ஆட்சி நிச்சயம் தொடரும்.ஜெய் ஹிந்த்.
Rate this:
Share this comment
Palanisamy T - Kuala Lumpur,மலேஷியா
18-ஏப்-201905:00:45 IST Report Abuse
Palanisamy Tமோடி அவர்கள் மட்டும் ஒழுங்கா? அதிமுக வோடு கூட்டுச் சேர்ந்துள்ளாரே அப்படியென்றால் அவர்க் கட்சியும் ஊழல்க் கட்சிதானே அந்த ஊழல்க் கட்சியான பாஜக தமிழகத்தில் காலூன்ற வேண்டுமா? கொஞ்சம் சிந்தியுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X