நாடு முழுவதும் இதுவரையில் ரூ. 2,628 கோடி பணம் பறிமுதல்: தொடர்ந்து தமிழகம் முதலிடம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாடு முழுவதும் இதுவரையில் ரூ. 2,628 கோடி பணம் பறிமுதல்: தொடர்ந்து தமிழகம் முதலிடம்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (12)
பணம் பறிமுதல் தமிழகம் 'டாப்'

புதுடில்லி : லோக்சபா தேர்தலையொட்டி, நாடு முழுவதும் இதுவரை ரூ.2,628.43 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில் தமிழகத்தில் மட்டும் ரூ. 514.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோக்சபா தேர்தலையொட்டி அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க, தேர்தல் கமிஷன், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக, ஆவணமில்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட, நகை, பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.







தமிழகம் டாப்


இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்தியில், நாடு முழுவதும் பறக்கும்படை நடத்திய சோதனையில், இதுவரை ரூ.2,628.43 கோடி பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் தமிழகத்தில் ரூ.514.57 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் பணம் பறிமுதலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக தெரிவித்துள்ளது.


உத்தரவு



முன்னதாக ஊடக செய்திகள், பல்வேறு புகார் வந்ததன் அடிப்படையில் தமிழகத்தில் தேர்தல் நடத்த முடியாத தொகுதிகள் எவை? என விரிவான அறிக்கை அனுப்பி வைக்க தமிழக தேர்தல் ஆணையருக்கு , தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது..

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X