குற்றபின்னணி வேட்பாளர்கள்: காங்.,முதலிடம்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (15)
Advertisement
குற்றப்பின்னணி, காங்கிரஸ்,பாஜ,

புதுடில்லி: நாளை நடக்கும் இரண்டாம் கட்ட லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குற்ற பின்னணி கொண்ட வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதில் காங்கிரஸ் முதலிடத்தில் உள்ளது.

12 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசங்களில் உள்ள 95 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக தேர்தல் நாளை(ஏப்., 18) நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. களத்தில், 1590 வேட்பாளர்கள் உள்ளனர்.




இந்நிலையில், ஜனநாயக சீர்திருத்தத்திற்கான அமைப்பு, களத்தில் உள்ள வேட்பாளர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் கிடைத்த முடிவுகளின்படி, 251 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 23 பேர் மீதும், பா.ஜ., மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை சேர்ந்த தலா 16 பேரும் கிரிமினல் வழக்குகள் உள்ளன.

மேலும், 251 பேரில் 27 பேர் மீது 5 அல்லது அதற்கும் மேல் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த 27 பேரில் சுயேச்சைகள் - 8 ,காங்கிரஸ் - 6, திமுக - 2, தேமுதிக - 2 பாமக- 2 ,பகுஜன் சமாஜ் 2, அதிமுக, சிவசேனா, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பா.ஜ., தலா ஒரு வேட்பாளர் அடங்குவர். காங்கிரஸ் சார்பில் ஒடிசாவின் சுந்தர்கர்க் தொகுதியில் போட்டியிடும் ஜார்ஜ் திர்கே மீது 41 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்கு அடுத்த இடத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் யோகேஷ் வர்மா உள்ளார். அவர் மீது 28 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
southindian - chennai,இந்தியா
18-ஏப்-201909:44:55 IST Report Abuse
southindian congress தலைமையே குற்ற பின் நானி கொண்ட கட்சி அப்பறம் எப்படி இருக்கும்
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201909:41:33 IST Report Abuse
மதுவந்தி கை!! தேர்ந்தவர்கள் தெரிந்த செய்தி மக்கள் தெளிவானவர்கள் இது சிறந்த செய்தி.
Rate this:
Share this comment
Cancel
Arsath Ali - Malaysia,மலேஷியா
18-ஏப்-201908:08:45 IST Report Abuse
Arsath Ali ஒட்டு மொத்த வேட்பாளர்களில் பிஜேபி கட்சியில் தான் அதிக கிரிமினல்கள் வேட்பாளர்கள் உள்ளனர்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X