ஐந்தரை மணி நேரத்தில் 400 கி.மீ., வேகம்: பச்சிளம் குழந்தையை காப்பாற்ற அதிரடி

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (7)
Advertisement
திருவனந்தபுரம்:பிறந்து, 15 நாட்களே ஆன குழந்தையின் உயிரை காப்பாற்ற, கர்நாடகாவின் மங்களூரிலிருந்து, கேரளாவின் கொச்சி வரையிலான, 400 கி.மீ., துாரத்தை, தடையின்றி, ஐந்தரை மணி நேரத்தில் கடக்க உதவிய, அரசு மற்றும் போலீசாரின் உதவியை, கேரள மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.கேரளாவில், உள்ள, காசர்கோடு மாவட்டத்தில், 15 நாட்களுக்கு முன், இதயக் கோளாறுடன், ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த
 ஐந்தரை மணி நேரத்தில் 400 கி.மீ., வேகம்: பச்சிளம் குழந்தையை காப்பாற்ற அதிரடி

திருவனந்தபுரம்:பிறந்து, 15 நாட்களே ஆன குழந்தையின் உயிரை காப்பாற்ற, கர்நாடகாவின் மங்களூரிலிருந்து, கேரளாவின் கொச்சி வரையிலான, 400 கி.மீ., துாரத்தை, தடையின்றி, ஐந்தரை மணி நேரத்தில் கடக்க உதவிய, அரசு மற்றும் போலீசாரின் உதவியை, கேரள மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கேரளாவில், உள்ள, காசர்கோடு மாவட்டத்தில், 15 நாட்களுக்கு முன், இதயக் கோளாறுடன், ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அந்த குழந்தைக்கு, அருகே உள்ள, கர்நாடக மாநிலம், மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


வேண்டுகோள்

இந்நிலையில், குழந்தைக்கு, 'நிமோனியா' பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, குழந்தையின் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயலிழக்க துவங்கியது. மங்களூரில் போதிய மருத்துவ வசதி இல்லாததால், திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் குழந்தையை அனுமதிக்கும்படி, டாக்டர்கள் அறிவுறுத்தினர்.ஆனால், பிறந்து, 15 நாட்களே ஆன குழந்தையை, அவ்வளவு துாரம் ஆம்புலன்சில் அழைத்துச் செல்வது, உயிருக்கு ஆபத்தானது என்றும், டாக்டர்கள் எச்சரித்தனர்.

குழந்தையின் உயிரை காப்பாற்ற நினைத்த பெற்றோர், வேறு வழியின்றி ஆபத்தை எதிர்கொள்ள சம்மதித்தனர்.இது தொடர்பாக, மாநில சுகாதாரத்துறையிடம் உதவி கோரப்பட்டது. குழந்தையின் ஆம்புலன்ஸ் செல்லும் பாதை முழுவதும், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், தடையில்லா பயணத்தை உருவாக்க, போலீசார் முடிவு செய்தனர். 'இது தொடர்பாக, மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்' என, முதல்வர் பினராயி விஜயன், தன் சமூக வலைதள
பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

இதையடுத்து, மங்களூரு மருத்துவமனையில் இருந்து, குழந்தையை ஏற்றி, ஆம்புலன்ஸ் புறப்பட்டது. வழி நெடுகிலும், நெரிசல் ஏற்படாத படி, போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதனால்,
திருவனந்தபுரத்தை நோக்கி, மின்னல் வேகத்தில், ஆம்புலன்ஸ் பறந்தது.


தீவிர சிகிச்சை

பாதி துாரத்தை கடந்த பின், குழந்தையின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட துவங்கியது. மேற்கொண்டு பயணிப்பது, குழந்தையின் உயிருக்கு ஆபத்து என, டாக்டர்கள் எச்சரித்தனர்.
இதையடுத்து, வழியில், கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை யில், குழந்தையை
அனுமதிக்கும்படி, கேரள மாநில, சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா கூறினார்.
குழந்தையின் பெற்றோருடன் பேசி, அதற்கு சம்மதிக்க வைத்தார். மேலும், குழந்தையின் மருத்துவ செலவுக்கு, அரசு உதவி செய்யும் என்றும் உறுதி அளித்தார்.

கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில், குழந்தை அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.கேரள மாநிலம், மலைப்பாங்கான பகுதி என்பதால், மங்களூரில் இருந்து கொச்சி வரையிலான, 400 கி.மீ., துாரத்தை, சாலை மார்க்க மாக கடக்க, 10 மணி நேரம் ஆகும்.


பாராட்டுதடையில்லா போக்குவரத்து வசதி செய்யப்பட்டதால், இந்த துாரத்தை, ஐந்தரை மணி நேரத்தில் கடக்க முடிந்தது.இதற்கு பெரும் உதவி செய்த மாநில அரசு, போலீசார் மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் ஆகியோரின் பணியை, கேரள மக்கள், வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Indumathi - chennai city,இந்தியா
19-ஏப்-201911:44:01 IST Report Abuse
Srinivasan Indumathi really great. thanks to the persons concerned in this success. pray GOD to bless the child with good health and future.
Rate this:
Cancel
18-ஏப்-201923:19:30 IST Report Abuse
Ranjith Rajan Flight la poirundha 3 Mani nerathil Door to Door poyirukalame.. Maruthuva uthavi seyyum arasangam.. itharku yen uthavavillai
Rate this:
Cancel
palani kuppuswamy - sanjose,யூ.எஸ்.ஏ
18-ஏப்-201922:11:54 IST Report Abuse
palani kuppuswamy இதற்கு ராணுவ ஹெலிகாப்டர் உள்நாட்டு சமுதாய பணிக்காக கோரப்பட்டிருக்க வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X