பதிவு செய்த நாள் :
யோகி ஆதித்யநாத் பதிவுகள் நீக்கம்
'டுவிட்டர்' நிறுவனம் நடவடிக்கை

புதுடில்லி, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய இரு பதிவுகளை, 'டுவிட்டர்' நிறுவனம் நீக்கியுள்ளது.

 யோகி ஆதித்யநாத், பதிவுகள், நீக்கம், 'டுவிட்டர்' நிறுவனம் நடவடிக்கை

பிரிவினைவாதம்
கேரள மாநிலம், வயநாடு லோக்சபா தொகுதி யில், காங்., தலைவர், ராகுல் போட்டியிடுவதாக அறிவித்ததும், காங்., கூட்டணியைச் சேர்ந்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குறித்து, உ.பி., முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, யோகி ஆதித்யநாத், சமூக வலைதளமான, 'டுவிட்டரில்' கருத்து தெரிவித்திருந்தார்.அதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நாட்டில்

பிரிவினைவாதத்தை துாண்டுவதாகவும், அந்த கட்சி, 'வைரஸ்' போல கொடியது என்றும், அவர்குறிப்பிட்டிருந்தார்.


இது குறித்து, தலைமை தேர்தல் ஆணையத்திடம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதில், 'நாடு சுதந்திரம் பெற்ற பின் துவக்கிய, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய அரசியல் சாசன சட்டப்படி, மதச்சார்பின்மை, சகோதரத்துவம், ஒற்றுமையை பேணிக் காத்து வருகிறது.

சர்ச்சை'

இந்நிலையில், யோகி ஆதித்யநாத், சமூகத்தில் வெறுப்பைதுாண்டும் வகையில் கருத்து தெரிவித்திருப்பது, சட்டப்படி தண்டனைக்கு உரியது என்பதால், அவரது சமூக வலைதள கணக்குகளை முடக்குவது உட்பட, கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, தெரிவிக்கப் பட்டிருந்தது. இதையடுத்து, டுவிட்டர் நிறுவனம், யோகி

Advertisement

ஆதித்யநாத்தின் சர்ச்சைக்குரிய இரு, 'டுவிட்டர்' பதிவுகளை நீக்கியுள்ளது. அத்துடன், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், நடிகை, கோனா மித்ரா உட்பட, பா.ஜ. ஆதரவாளர்கள், 31 பேரின், 34 பதிவுகளும் நீக்கப்பட்டு உள்ளன.

இவற்றில் பெரும்பாலான பதிவுகள், பாக்., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி கொடிகளில் காணப்படும், பச்சை நிற ஒற்றுமையை சுட்டிக் காட்டிஇருந்தன.


Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஏப்-201923:20:35 IST Report Abuse

Pugazh Vமதவெறி மண்டைக்கேறிக் கிடக்கும் பாஜக வாசகர்கள் மீண்டும் இங்கே மதவிரோத இனவிரோத வன்முறை வார்த்தை களைக் கொட்டியிருக்கிறார்கள். மீண்டும் இவர்கள் வந்தால் இந்தியா ஆப்கானிஸ்தானை விட மோசமான நிலையை அடையும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த கும்பல், இந்தியாவில் இனப்படுகொலைகளை நடத்தும்.அதுவும் அந்த இனத்தவரை வைத்தே அதே இனத்தவரை கொலை செய்ய கூலி கொடுக்கும்

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
18-ஏப்-201919:16:39 IST Report Abuse

K.   Shanmugasundararaj

Rate this:
kandhan. - chennai,இந்தியா
18-ஏப்-201916:19:57 IST Report Abuse

kandhan.இந்த தேர்தல் மாற்றும் என்று நம்புவோம் கந்தன் சென்னை

Rate this:
மேலும் 14 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X