'எதிர்க்கட்சி பட்டனை அழுத்தினால் 'கரன்ட் ஷாக்' அடிக்கும்; ஜாக்கிரதை!'

Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 'எதிர்க்கட்சி பட்டனை அழுத்தினால் 'கரன்ட் ஷாக்' அடிக்கும்; ஜாக்கிரதை!'

கோரார், ''ஓட்டு இயந்திரத்தில், கைச்சின்னத்துக்கு பதிலாக, வேறு எந்த சின்னத்திற்கான பட்டனை அழுத்தினாலும், 'கரன்ட் ஷாக்' அடிக்கும்,'' என, சத்தீஸ்கர் மாநில அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, கவாசி லக்மா கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கரில், முதல்வர் பூபேஷ் பாகேல் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, காங்கெர் லோக்சபா தொகுதிக்கு, இன்று தேர்தல் நடக்கவுள்ளது. காங்கிரஸ் சார்பில், பிரேஷ் தாக்குர் போட்டியிடுகிறார்.இவருக்கு ஆதரவாக, மாநில, தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான, கவாசி லக்மா பிரசாரம் செய்தார். கோரார் என்ற இடத்தில், வாக்காளர்களிடையே, அவர் பேசியதாவது:ஓட்டு இயந்திரத்தில், காங்கிரசின் கைச்சின்னம், முதலில் உள்ளது. இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில், எதிர்க்கட்சிகளின் சின்னங்கள் உள்ளன. கைச்சின்னத்துக்கு நேராக உள்ள பட்டனை, நீங்கள் அழுத்த வேண்டும்.இரண்டாவது மற்றும் மூன்றாவதாக உள்ள சின்னங்களுக்கு அருகில் உள்ள பட்டனை அழுத்தினால், உங்களுக்கு, 'கரன்ட் ஷாக்' அடிக்கும். அதனால், விபரீதத்துடன் விளையாடாமல், முதலில் உள்ள சின்னத்துக்கான பட்டனை அழுத்துங்கள்.இவ்வாறு, அவர் பேசினார்.

இது குறித்து, பா.ஜ., வினர், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறும் வகையில் பேசியது தொடர்பாக, விளக்கம் அளிக்கும்படி, கவாசி லக்மாவுக்கு, தேர்தல் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-201910:26:53 IST Report Abuse
Yaro Oruvan நாட்டு நலனையும் / ஊழல் இல்லாத ஆட்சியையும் / ஸ்திரமான அரசையும் கொடுக்கும் விதமாக வாக்களியுங்கள்.. தொங்கு பாராளுமன்றம் அமைவது நாட்டின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் கேடு.. மூன்றாம் அணித்தலைவர்கள் எல்லாமே டுபாக்கூர்.. ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை ஆகிவிடும்.. தற்போதுள்ள நிலையில் இந்தியாவிற்கு பாஜகவே நல்ல தேர்வு.. முந்தைய தேஜக ஆட்சி ஊழலின் உச்சகட்டமாக இருந்தது.. தற்போதைய பாஜகவிமன் ஆட்சியில் ஊழல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பு அம்சங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.. போலி மதச்சார்பின்மைக்கு சவுக்கடி கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு சில நிர்வாக தவறுகள் நடந்திருக்கலாம் தற்போதைய ஆட்சியில்.. ஆனால் ஆட்சியின் நோக்கமும் எண்ணமும் நாட்டின் நலனை முன்னிறுத்தியே இருந்தது.. எனவே மூன்றாம் ஆணை மாநில போலி மதவாத அரசியல்வியாதிகளுக்கு மாற்று என நினைத்து வாக்களிப்பது தலை அரிப்புக்கு கொள்ளிக்கட்டையை எடுத்து சொரிந்தது போல் ஆகிவிடும்.. பாத்து எல்லாவற்றையும் நினைத்து ஒட்டு போடுங்கள்.. ஜைஹிந்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X