பதிவு செய்த நாள் :
இம்ரான் கான் பேச்சின் பின்னணியில் காங்கிரஸ்?
சந்தேகத்தை கிளப்புகிறார் நிர்மலா சீதாராமன்

பிரதமர் நரேந்திர மோடி குறித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ள கருத்தின் பின்னணியில், காங்கிரசின் சூழ்ச்சி உள்ளதோ என்ற சந்தேகம் நிலவுகிறது,'' என, ராணுவ அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவரு மான, நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

 இம்ரான் கான், பேச்சின், பின்னணியில்,காங்கிரஸ்?,சந்தேகத்தை கிளப்புகிறார்,நிர்மலா சீதாராமன்

கருத்து
அண்டை நாடான, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், சமீபத்தில், நம் நாட்டில் நடக்கும் லோக்சபா தேர்தல் மற்றும் ஜம்மு - காஷ்மீர் பிரச்னை உட்பட, சில விஷயங்கள் குறித்து, கருத்து தெரிவித்து இருந்தார்.

அப்போது அவர், 'இந்தியாவில், மீண்டும், பா.ஜ., ஆட்சிக்கு வந்தால், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான அமைதி பேச்சு மற்றும் காஷ்மீர் பிரச்னை ஆகியவற்றுக்கு, உரிய முறையில் தீர்வு காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன' என்றார்.புல்வாமா, பாலாகோட் விமான தாக்குதல் உட்பட, பயங்கரவாத செயல்களுக்கு

எதிராகவும், பாகிஸ்தானுக்கு எச்சரிக்கையும் விடுக்கும் விதமாகவும், பிரதமர் உள்ளிட்ட, பா.ஜ., தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.,வை, இம்ரான் கான் புகழ்கிறாரா அல்லது மறைமுகமாக வம்பிழுக் கிறாரா என்றசர்ச்சை, தேசிய அரசியலில் காணப் படுகிறது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர்கள் பலரும், பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்து இருந்தனர். இதுகுறித்து, ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், டில்லியில் செய்தியாளர் களிடம் கூறியதாவது:பாகிஸ்தான் பிரதமரின் பேச்சில், காங்கிரசின் பின்னணி இருப்பதாக தெரிகிறது.


லோக்சபா தேர்தலுக்காக, காங்கிரஸ் செய்யும் சூழ்ச்சியின் ஒரு அங்கமோ இது, என்ற சந்தேகமும் எழுகிறது.காங்கிரசின் முக்கிய தலைவர்கள் பலர், பாகிஸ்தானுக்கே சென்று, பிரதமர் மோடியை வீழ்த்த உதவும்படி, கேட்டு வருகின்றனர். அங்கு செல்லும் அவர்கள், 'மோடியை வீழ்த்த, எங்களுக்கு உதவுங்கள்'என்கின்றனர்.

அவமதிப்பு

காங்கிரஸ் தலைவர்களின், இந்த திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இம்ரான் கானின் கருத்தை பார்க்க வேண்டியுள்ளது. காங்கிரசின் பின்னணி, இதில் உள்ளது. இதை தவிர, வேறு எந்த காரணத்திற்காக,

Advertisement

இது போன்ற கருத்துக்கள் வெளியாக வேண்டுமென தெரியவில்லை.

நான் கூறுவதை, பா.ஜ., வின் கருத்தோ அல்லது ராணுவ அமைச்சகத்தின் கருத்தோ என கருதக்கூடாது. இது,என் தனிப்பட்ட கருத்து.'ரபேல்' போர் விமான ஒப்பந்த ஆவ ணங்கள் வெளியானது, சட்டவிரோத மானது. ஆவணங்கள் வெளியானதாலேயே, அரசின் தரப்பு, பலவீனமாக ஆகிவிடவில்லை; இருப் பினும், எவ்வாறு ஆவணங்கள் கசிந்தன என்பது குறித்து, ராணுவ அமைச்சகம் விசாரித்து வருகிறது.

'நாட்டின் பாதுகாவலர் திருடன்' என, தன் உத்தர வில், ஒரு இடத்தில் கூட, உச்ச நீதி மன்றம் குறிப்பிடவில்லை. இந்த விஷயத்தில், ராகுல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சிக்கி உள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.நமது டில்லி நிருபர் -'


Advertisement

வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
19-ஏப்-201907:36:31 IST Report Abuse

K.   Shanmugasundararaj

Rate this:
Anandan - chennai,இந்தியா
19-ஏப்-201907:19:30 IST Report Abuse

Anandanபாகிஸ்தான், காங்கிரஸ் பத்தி பேசாம பிஜேபிக்கு பொழுது விடியாது. ஏன்? எந்த விஷயத்திலும் அறிவு தெளிவு இல்லை. இப்படி குறை சொல்லி 5 வருட காலத்தை ஒட்டியாச்சு.

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
18-ஏப்-201923:00:57 IST Report Abuse

Pugazh Vபாகிஸ்தான் நினைத்தால் பாஜக அழிந்து விடும் என்று பாஜக உறுப்பினர் ஆரூராங் கூட நம்புகிறார். பாஜக வை அழிக்க ம.ச.ஐயர் பாகிஸ்தானுடன் பேசினாராம். அத்தனை கட்சி தானா பாஜக? பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கானின் பேச்சுகளைக்கூட பின்னணி யிலிருந்து இயக்கும் அளவிற்கு காங்கிரஸ் பவர் புல் கட்சி யா?

Rate this:
மேலும் 44 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X