பெண்ணுக்கு, 'சீட்'நவீன் தாராளம்

Updated : ஏப் 17, 2019 | Added : ஏப் 17, 2019 | கருத்துகள் (2)
Advertisement
பெண்ணுக்கு, 'சீட்,'நவீன், தாராளம்

ஒடிசாவில், சுய உதவி குழுவில் சிறப்பாக செயல்பட்ட பெண்ணுக்கு, லோக்சபா தேர்தலில் போட்டியிட, முதல்வர் நவீன் பட்நாயக் வாய்ப்பளித்துள்ளார். அதிலும், தன் சொந்த தொகுதியை கொடுத்து, அங்கீகாரம் அளித்துள்ளார்.

ஒடிசாவில் உள்ள, 21 லோக்சபா தொகுதிகளுக்கு, நான்கு கட்டங்களாக, தேர்தல் நடக்கிறது. இங்கு உள்ள, அஸ்கா, வி.ஐ.பி., தொகுதியாக கருதப்படுகிறது. இங்கு, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக், மூன்று முறை, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நவீன் பட்நாயக் கின் தந்தை, பிஜு பட்நாயக்கும், இங்கு ஒரு முறை, எம்.பி.,யாகி உள்ளார்.இந்த தொகுதியின் கீழ் வரும், ஹிஞ்ச்லி சட்டசபை தொகுதியில் தான், முதல்வர் நவீன் பட்நாயக், 19 ஆண்டுகளாக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறார்.






அதனால், அஸ்கா லோக்சபா தொகுதியை, நவீன் பட்நாயக், தன் சொந்த தொகுதியாக கவனித்து வருகிறார்.இந்த தேர்தலில், பிஜு ஜனதா தளம் சார்பில், சுய உதவி குழு உறுப்பினர், பிரமீளா நிறுத்தப்பட்டுள்ளார். இவர், முதல்வர் நவீன் பட்நாயக்கின் நேரடி கண்காணிப்பில் உள்ள, சுய உதவி குழு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டார். அவரை அங்கீகரிக்கும் விதமாக, தேர்தலில் போட்டியிட, 'சீட்' வழங்கப்பட்டுள்ளது. மிகவும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பிரமீளாவுக்கு, ஒரியா மொழி மட்டுமே தெரியும். இது குறித்து, அவர் கூறும்போது, 'தென் மாநிலங்களைச் சேர்ந்த, எம்.பி.,க்கள் சிலருக்கு, ஹிந்தியும் தெரியாது; ஆங்கிலமும் தெரியாது. 'எனினும், அவர்கள் பார்லிமென்டில் செயல்படுகின்றனர்.

அது போல், நானும் செயல்படுவேன்' என, நம்பிக்கையுடன் கூறியுள்ளார். இவரை எதிர்த்து, பா.ஜ., சார்பில், முன்னாள், எம்.எல்.ஏ., ராமகிருஷ்ண பட்நாயக்கின் மகள், 50 வயதாகும், அனிதா சுபதர்ஷினி போட்டியிடுகிறார். அனிதாவின் தாய், குமுதினி பட்நாயக், அஸ்கா தொகுதியில், 2000 ஆண்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின், அக்கட்சியில் இருந்து விலகி, பா.ஜ.,வில் சேர்ந்தார்.காங்கிரசை பொறுத்தவரை நேரடியாக வேட்பாளரை நிறுத்தவில்லை. இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடும், ராமகிருஷ்ண பாண்டாவை ஆதரித்துள்ளது.-நமது நிருபர்-


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201908:06:57 IST Report Abuse
Srinivasan Kannaiya இதுவும் ஒரு விதத்தில் மற்ற தொகுதி மக்களை கவருவதற்க்கே
Rate this:
Share this comment
Cancel
sathya -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-201923:07:27 IST Report Abuse
sathya We in Tamil Nadu will choose only family members
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X