அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தமிழக மக்கள் மகுடம் யாருக்கு?
இன்று எழுதப்படுகிறது தீர்ப்பு

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், 22 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் நடப்பதால், இது, 'மினி' பொதுத்தேர்தலாக பார்க்கப்படுகிறது. இத்தொகுதிகளின் தேர்தல் முடிவுகள் தான், ஆட்சி மகுடம் யாருக்கு என்பதை, தீர்மானிக்க போகின்றன. யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதையும், மக்கள், இன்று பதிவு செய்யும் ஓட்டுக்கள், தீர்மானிக்க உள்ளன.

தமிழக மக்கள், மகுடம் ,யாருக்கு?, இன்று, எழுதப்படுகிறது, தீர்ப்பு

தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது. நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, அடுத்த மாதம், 19ம் தேதி, இடைத்தேர்தல் நடக்க உள்ளது.தமிழகத்தில், லோக்சபா தேர்தலில், 2.96 கோடி ஆண்கள்; 3.02 கோடி பெண்கள்; 5,790 திருநங்கையர் என, 5.98 கோடி வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். 39 லோக்சபா தொகுதிகளில், அங்கீகரிக்கப்பட்ட, தேசிய கட்சிகள் சார்பில், 57; அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகள் சார்பில், 55; பதிவு பெற்ற கட்சிகள் சார்பில், 174; சுயேச்சையாக, 559 பேர் என, மொத்தம், 845 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், 781 பேர் ஆண்கள்; 63 பேர் பெண்கள். ஒரு திருநங்கை.

சட்டசபை இடைத்தேர்தலில், அங்கீகரிக்கப் பட்ட தேசிய கட்சிகள் சார்பில், யாரும் போட்டி யிடவில்லை. அங்கீகரிக்கப் பட்ட மாநில கட்சிகள் சார்பில், 36; பதிவு பெற்ற கட்சிகள் சார்பில், 46; சுயேச்சையாக, 187 பேர் என, மொத்தம், 269 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில், 27 பேர் பெண்கள்.அனைத்து வேட்பாளர்களும், பிரசாரத்தை முடித்துள்ளனர்.

அரசியல் கட்சி வேட்பாளர்கள், பணத்தை வாரி இறைத்து, பிரசாரத்தில் துாள் கிளப்பினர். சிறிய கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், மிகவும் எளிமையான முறை யில், முடிந்த அளவு ஓட்டு சேகரித்தனர். சுயேச்சை வேட்பாளர்களில், பெரும்பாலா னோர், அரசியல் கட்சி வேட்பாளர்களால், பூத் ஏஜன்ட் தேவைக்காக நிறுத்தப்பட்டவர்கள். அவர்கள், பிரசாரம் எதையும் மேற்கொள்ள வில்லை.

அரசியல் கட்சி தலைவர்கள், தங்கள் வேட் பாளர்களை ஆதரித்து, மாநிலம் முழுவதும், பிரசாரம் மேற்கொண்டனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், ஒரு மாதமாக நடந்த பிரசாரம், நேற்று முன்தினம் நிறைவடைந்தது.இந்த தேர்தல், சட்டசபை பொதுத் தேர்தலாக இல்லாவிட்டாலும், 22 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடப்பதால், மினி சட்டசபை தேர்தலாக அமைந்துள்ளது.

குறைந்த பட்சம்
ஏனெனில், தமிழகத்தில் ஆட்சியில் உள்ள, அ.தி.மு.க.,விற்கு, சட்டசபையில் பெரும்பான்மை இல்லை. தற்போது அக்கட்சிக்கு, 114 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களில், மூன்று பேர், தினகரன் அணியில் உள்ளனர். இருவர், அ.தி.மு.க., மீது அதிருப்தியில் உள்ளனர்.எனவே, அக்கட்சி, இடைத்தேர்தல் நடக்கும், 22 சட்டசபை தொகுதிகளில், குறைந்தபட்சம், ஒன்பதில், வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில்

உள்ளது.எதிர்க்கட்சியான, தி.மு.க.,விற்கு, அதன் கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து, 97 எம்.எல்.ஏ.,க்கள் பலம் உள்ளது.அக்கட்சி, சட்டசபை இடைத்தேர்தல் நடக்கும், 22 தொகுதிகளிலும் வெற்றி பெற்றால், தி.மு.க., கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும். ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்பு கிடைக்கும்.

ஆட்சியை தீர்மானிக்கும் தேர்தல் என்பதால், அ.தி.மு.க., - தி.மு.க., இரண்டும், லோக்சபா தேர்தலை விட, அதிகமாக, சட்டசபை இடைத் தேர்தலுக்கு, முக்கியத்துவம் கொடுத்தன. இடை த்தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பதற்காகவே, அ.தி.மு.க., பலமான கூட்டணியை உருவாக்கியது. கூட்டணி கட்சிகள் பலத்துடன், எளிதில், பத்து தொகுதிகளை வென்று விடலாம் என கணக்கிட்டு உள்ளது.

எதிர்பார்ப்பு

மேலும், கூட்டணி கட்சிகளுக்கு, ஒன்றை கூட ஒதுக்காமல், 22 தொகுதிகளிலும், அ.தி.மு.க.,வே களம் இறங்கி உள்ளது.அதே பாணியை, தி.மு.க.,வும் பின்பற்றி, அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இரு கட்சிகளும், பணத்தை வாரி இறைத்துள்ளன. இவர்களுக்கு இணையாக, அ.ம.மு.க.,வும் பணம் செலவழித்துள்ளது. இது தவிர, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி போன்றவை, களத்தில் தீவிர பிரசாரம் செய்துள்ளன.

ஆட்சியை தீர்மானிக்கும் இடைத்தேர்தலில், எந்த கட்சிக்கு மகுடம் என்பது, பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.அதேபோல், லோக்சபா தேர்தலில், 39 தொகுதிகளின் வெற்றி, பா.ஜ., - காங்., கட்சிகளுக்கு, மிக முக்கியமானதாக உள்ளது.


தீர்மானிக்கும் வசதி
தேசிய அளவில், இரு கட்சிகளுக்கும், ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்காதபோது, தமிழகத்தில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., பெறும் தொகுதிகள் உதவியாக இருக்கும்.

எனவே, தமிழகத்தை பொறுத்தவரை, இரு தேர்தலும் முக்கியமானவை. மத்தியிலும், மாநிலத்திலும், யார் மகுடம் சூட்ட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் தேர்தல். மத்திய, மாநில அரசுகளின் தலைவிதியை, தமிழக மக்கள், இன்று நிர்ணயிக்க உள்ளனர்.

இன்று, மக்கள் பதிவு செய்யும் ஓட்டு, தமிழகத்தில், இரண்டு ஆண்டு கால ஆட்சியையும், மத்தியில், ஐந்தாண்டு கால ஆட்சியையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது. முடிவு, மே, 23ல் தெரியும்! மொபைல் போன் வழியே பிரசாரம்தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின், பெரும்பாலான வேட்பாளர்கள், மொபைல் போன் வழியே, ஓட்டு கேட்டு வருகின்றனர். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

அனைத்து தொகுதிகளிலும், தேர்தல்பிரசாரம், 16ம் தேதி மாலை, 6:00 மணியுடன் நிறைவடைந்தது. மதுரை தொகுதியில், இரவு, 8:00 மணிக்கு, பிரசாரம் நிறைவடைந்தது. அதன்பின் எந்த கட்சிகளும், எவ்விதமான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடக்கூடாது. ஊடகம், சமூக வலைதங்கள் உள்ளிட்ட, எந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் வழியாகவும், பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது.


Advertisement

இதன்படி, அனைத்து கட்சியினரும், நேற்றுமுன்தினம் மாலை, தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தனர். எனினும், சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், மொபைல் போன்களில், 'வாய்ஸ் கால்' வழியே, தங்களுக்கு ஓட்டளிக்கும்படி, பிரசாரம் செய்து வருகின்றனர்.
மொபைல் வழியே தொடரும் பிரசாரம்

தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த பின், பெரும்பாலான வேட்பாளர்கள், மொபைல் போன் வழியே, ஓட்டு கேட்டு வருகின்றனர். தமிழகத்தில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்ட சபை தொகுதிகளுக்கும், இன்று ஓட்டுப்பதிவு நடக்க உள்ளது.

அனைத்து தொகுதிகளிலும், தேர்தல் பிரசாரம், 16ம் தேதி மாலை, 6:00 மணியுடன் நிறை வடைந்தது. அதன்பின் எந்த கட்சிகளும், எவ்விதமான தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபடக்கூடாது. ஊடகம், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட, எந்த எலக்ட்ரானிக் சாதனங்கள் வழியாகவும், பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி, அனைத்து கட்சியினரும், நேற்று முன்தினம் மாலை, தேர்தல் பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

எனினும், சில அரசியல் கட்சி வேட்பாளர்கள், மொபைல் போன்களில், 'வாய்ஸ் கால்' வழியே, தங்களுக்கு ஓட்டளிக்கும்படி, பிரசாரம் செய்து வருகின்றனர்.

500க்கு, 200;200க்கு, 100!

தென் சென்னை, கடலோர பகுதியில் வாக்காளர்களுக்கு, அ.தி.மு.க., - அ.ம.மு.க., வேட்பாளர்கள், பாகுபாடின்றி பணப் பட்டுவாடா செய்துஉள்ளனர்.தென் சென்னை லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., சார்பில், 'சிட்டிங்' எம்.பி.,யும், அமைச்சர் ஜெயகுமாரின் மகனுமான, ஜெயவர்தன்; தி.மு.க., சார்பில், தமிழச்சி; அ.ம.மு.க., சார்பில், இசக்கி சுப்பையா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தொகுதிக்கு உட்பட்ட கலங்கரை விளக்கம் முதல், திருவான்மியூர் வரை, மீனவ சமூகத் தினர் அதிகம் வசிக்கின்றனர். அவர்களின் ஓட்டு களை பெற, அதே சமூகத்தைச் சேர்ந்த ஜெயவர்தன் தரப்பில் இருந்து, வாக்காளர் களுக்கு, நேற்று முன்தினம் இரவு முதல், தலா, 500 ரூபாய் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

அ.ம.மு.க., தரப்பில் இருந்து, தலா, 200 ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.பணம் பட்டுவாடா பணியில் ஈடுபட்ட இரு கட்சிகளைச் சேர்ந்த சில நிர்வாகிகள், 500 ரூபாய்க்கு பதில், 200 ரூபாயும்; 200 ரூபாய்க்கு பதில், 100 ரூபாயும் வழங்கிஉள்ளனர். தி.மு.க., தரப்பிலும், பணம் வழங்கப்பட்டுள்ளது.
-நமது நிருபர்-


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
18-ஏப்-201915:53:36 IST Report Abuse

வல்வில் ஓரி சுடலை க்கு சாதகமா தீர்ப்பு வந்தா இப்பவே மெழுகுவர்த்தி ஒரு நாலு க்ரோஸ் வாங்கி ஸ்டாக் வெக்கிறது நல்லது..

Rate this:
P.Narasimhan - Tirupattur,Vellore Dist,இந்தியா
18-ஏப்-201914:03:45 IST Report Abuse

P.Narasimhanஎந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை மாநிலத்திலும், மத்தியிலும் இந்த தேர்தலினால் ...

Rate this:
18-ஏப்-201911:45:52 IST Report Abuse

ஆப்புநாம் தேர்ந்தெடுத்து அனுப்புறோம்..அவிங்க மகுடம் சூட்டிக்கொண்டு மன்னராவாங்களாம். நம்மள அடிமைகளாக்கி ஆட்சி செய்வாங்களாம்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X