அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
  இன்று காலை, 7:00 மணி முதல், ஓட்டுப் பதிவு, தயாராகுங்கள்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 39 லோக்சபா தொகுதிகளுக்கும், 19 சட்டசபை தொகுதிகளுக்கும், இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. காலை, 7:00 மணிக்கே, ஓட்டுப்பதிவு துவங்குவதால், ஒவ்வொரு வாக்காளரும், தன் ஜனநாயக கடமையை நிறைவேற்றத் தயாராகுங்கள். அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதும், இடைத்தேர்தலை சந்திக்கும், 19 எம்.எல்.ஏ.,க்களை தேர்வு செய்வதும், உங்கள் உரிமையும், பொறுப்பும் என்பதால், எக்காரணத்தை முன்னிட்டும், இன்று ஓட்டளிக்க தவறாதீர்கள்.தமிழகத்தில் உள்ள, 39 லோக்சபா தொகுதிகளில், வேலுார் தொகுதியில், தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில், ஒரு லோக்சபா தொகுதிக்கும், ஒரு சட்டசபை தொகுதிக்கும், இன்று தேர்தல் நடக்கிறது.இத்தொகுதிகள் அனைத்திலும், காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கும்.
மதுரை தவிர, அனைத்து தொகுதிகளிலும், மாலை, 6:00 மணிக்கு நிறைவடையும். மதுரையில், சித்திரை திருவிழா நடப்பதால், அங்கு மட்டும், இரவு, 8:00 மணிக்கு ஓட்டுப்பதிவு நிறைவடையும்.ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்க, அனைத்து விதமான

நடவடிக்கைகளையும், தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பது, வாக்காளர்கள் அனைவருடைய கடமை. அதேபோல், 19 எம்.எல்.ஏ.,க்கள் தேர்வுக்கும், வாக்காளர்கள் தான் பொறுப்பு. எனவே, அனைவரும், தங்கள் கடமையை உணர்ந்து, இன்று ஓட்டளிக்க முன்வர வேண்டும்.தேர்தல் ஏற்பாடுகள் குறித்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, சத்யபிரதா சாஹு அளித்த பேட்டி:
அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. அவற்றை ஏற்றிச் சென்ற வாகனங்களில், செல்லுமிடத்தை கண்டறியும், ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்பட்டு, அனைத்தும் கண்காணிக்கப்பட்டன.
தமிழகத்தில், 30

ஆயிரம் ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டுள்ளன. பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், துணை ராணுவப் படையினரும், 'மைக்ரோ' பார்வையாளர்களும் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். வெப் கேமரா வாயிலாக, ஓட்டுப்பதிவை கண்காணிக்கவும், 'வீடியோ' பதிவு செய்யவும், ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
ஏதேனும் பிரச்னை இருந்தால், '1950' என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு, போன் செய்யலாம். அதில், 24 மணி நேரமும் ஆட்கள் இருப்பர். அவர்கள், உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவித்து, நடவடிக்கை மேற்கொள்வர்.தேர்தல் பாதுகாப்பு பணியில், 27 ஆயிரத்து, 500 துணை ராணுவ வீரர்கள், 1.39 லட்சம் போலீசார், முன்னாள் ராணுவ வீரர்கள், ஊர்க்காவல் படையினர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், ஓய்வு பெற்ற

போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
காலை, 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கும். முன்னதாக காலை, 6:00 மணிக்கு மாதிரி ஓட்டுப்பதிவு நடக்கும். மாலை, 6:00 மணி வரை ஓட்டு போடலாம். அதன் பின், ஓட்டளிக்க, வரிசையில் நிற்போருக்கு, 'டோக்கன்' வழங்கப்படும். இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை, ஓட்டுப்பதிவு சதவீதம் கணக்கிடப்படும்.
மதுரையில் இரவு, 8:00 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும். அப்போது, ஆட்கள் வரிசையில் நின்றால், அவர்களுக்கு டோக்கன் வழங்கப்படும். தேவைப்படும் இடங்களில், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்படும்.இளைஞர்கள், 12 லட்சம் பேர், முதல் முறையாக ஓட்டளிக்க உள்ளனர். மாற்றுத் திறனாளிகள், நான்கு லட்சம் பேரின் பெயர், வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. மக்களுக்கு ஓட்டளிக்க, அதிக ஆர்வம் உள்ளது.
எனவே, அனைத்து வாக்காளர்களும், ஓட்டுச்சாவடிக்கு சென்று, 100 சதவீதம் ஓட்டளிக்க வேண்டும்; வெயிலை பொருட்படுத்தாமல், ஓட்டளிக்க வர வேண்டும். தேர்தல் அமைதியாக நடக்க, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
karupanasamy - chennai,இந்தியா
18-ஏப்-201914:45:33 IST Report Abuse

karupanasamyஎங்கள் குடும்பத்தில் நாலு தலைமுறைகளாக விரதமிருந்து பெரியப்பாதை வழியாக சபரிமலைக்கு சொல்லுகிறோம். வாசலில் அய்யப்பன் படத்துடன் திமுகாவிற்கோ அதன் கூட்டணிக்கோ வாக்களிக்கமாட்டோம் என்று அறிவிப்பை வைத்துவிட்டோம் எனவே திமுக கூட்டணி யாரும் வோட்டு கேட்டு வரவில்லை. காலையில் குளித்துவிட்டு அய்யப்பனை வழிபாட்டு மனதார சரணம் சொல்லியபடியே திமுக கூட்டணிக்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் வாக்களித்தோம். நிச்சயம் திமுக கூட்டணி தோற்கும். சுவாமியே சரணம் ஐயப்பா.

Rate this:
Prabu.KTK - Coimbatore,இந்தியா
18-ஏப்-201911:12:45 IST Report Abuse

Prabu.KTKஇந்துக்கள் அனைவரும் ஒன்று பட்டு , ஹிந்து விரோத , தீய சக்தியான திமுகா வை தமிழ் நாட்டை விட்டே விரட்ட வேண்டிய காலம் இது ஹிந்துக்களே ஒன்று படுவீர் தமிழ் ஹிந்து கடவுள்களை ஸ்வாமி ஐயப்பனை அவமானப் படுத்திய திமுகா, தி க , போன்ற தேச , ஹிந்து விரோத சக்திகள் அழியட்டும் மற்ற எல்லா பண்டிகைக்கும் ( கிறிஸ்துமஸ் , மிலாடி நபி )வாழ்த்து சொல்லும் சுடலை ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற மாட்டாராம் இளைஞர்களே சிந்திப்பீர் இந்துமதம் குறித்து விமரிசனம் செய்யும் பலர் அடிப்படையில் வேற்று மதம் மீது நம்பிக்கை கொண்டவர்கள் - ஆனால் பாருங்கள் இந்து மத பெயரில் ஒளிந்துகொண்டு இருப்பார்கள் - உதாரணம் திரு. தா. பாண்டியன் (உண்மை பெயர் தாமஸ் பாண்டியன்) - கம்யூனிஸ்ட் திரு. டி. ராஜா (உண்மை பெயர் டானியல் ராஜா) - கம்யூனிஸ்ட் திரு. சீமான் (உண்மை பெயர் செபாசிட்டியான் சைமன்) - நாம் தமிழர் கட்சி திரு. மனுஷ புத்திரன் (உண்மை பெயர் ஷாஹுல் ஹமீத்) - தொலைக்காட்சி விவாத பேச்சாளர் திரு. திருமுருகன் காந்தி (உண்மை பெயர் டானியல்) - சமூக ஆர்வலர் திருமதி. வீர லெட்சுமி (உண்மை பெயர் ஸ்டெல்லா) - சமூக ஆர்வலர் திரு. விஜய் (உண்மை பெயர் ஜோசப் விஜய்) ஹிந்துக்கள் எல்லோரும் ஒன்று பட வேண்டிய தருணம் இது. அனு தினமும் 16 மணி நேரம் தேசத்திற்காக உழைக்கும் மிக சிறந்த பிரதமர் நமக்கு கிடைத்து இருப்பது ஒரு மிகப் பெரிய வரம். மீண்டும் மோடி பிரதமராக வர எல்லோரும் தாமரை , இரட்டை இலை, மற்றும் முரசு, சின்னத்தில் வாக்கு அளிப்பீர் மோடி மாபெரும் வெற்றி பெற செய்ய வேண்டும். ஜெய் ஹிந்த்

Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
18-ஏப்-201910:50:45 IST Report Abuse

Narayanan Muthuஅருமையான வாய்ப்பு. தவற விடாதீர்கள். தாமதிக்காதீர்கள்.

Rate this:
மேலும் 6 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X