அரசியல் செய்தி

தமிழ்நாடு

செல்லாத ரூ.1,000 நோட்டு கேலிக்கு ஆளான ஸ்டாலின்

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை,மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1,000 ரூபாயை பன்னீர்செல்வம் கொடுத்ததாக ஸ்டாலின் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.தேனி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவிந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். காங். சார்பில் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளராக தங்க தமிழ்செல்வன்

சென்னை,மதிப்பிழப்பு செய்யப்பட்ட 1,000 ரூபாயை பன்னீர்செல்வம் கொடுத்ததாக ஸ்டாலின் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகியுள்ளது.தேனி தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் ரவிந்திரநாத் குமார் போட்டியிடுகிறார். காங். சார்பில் முன்னாள் மாநில தலைவர் இளங்கோவன், அ.ம.மு.க. வேட்பாளராக தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகின்றனர்.தொகுதியில் பணப் பட்டுவாடா அதிகளவில் நடந்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். அப்போது 'தேனியில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகன் தேர்தலில் நிற்கிறார். அங்கு 1,000 ரூபாய் நோட்டு கொடுப்பதாக ஆதாரத்துடன் வீடியோ வெளிவந்திருக்கிறது. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என்றார்.கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக நாட்டில் புழக்கத்தில் இருந்த 1,000 ரூபாய் நோட்டுகள் 2016 நவம்பர் மாதம் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அதற்கு பதிலாக புதிய 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் புழக்கத்திற்கு வந்தது.செல்லாத 1,000 ரூபாய் நோட்டை வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதாக ஸ்டாலின் கூறியதை பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
18-ஏப்-201915:29:51 IST Report Abuse
Girija தமிழ் தெரியாது ஹிந்தி தெரியாது இங்கிலிஷ் தெரியாது பொது அறிவு தெரியாது ஆனால் ஒன்னும் மட்டும் நல்ல தெரியும் கரெக்ட்டா ரூட் போட்டு (அருணாச்சலம் வசனம்)
Rate this:
Cancel
venkates - ngr,இந்தியா
18-ஏப்-201914:45:50 IST Report Abuse
venkates இதுலிருந்தே தெரிகிறது ,,,அவரின் நிலை ? இல்லையா?
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-ஏப்-201907:45:34 IST Report Abuse
Bhaskaran அவருக்கு பனைக்கும் பானைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசறார் ரொம்ப விவரமான அரசியல்வாதி இவர்முதல்வரானால் கூட இருக்கும் அல்லக்கைகளுக்கு அடிச்சது யோகம் இவரை வச்சே செஞ்சிடுவாங்க ,பவுடர்ப்பாண்டி பாரதி இளங்கோவன் ராசா துறையார் பாலு பொன்முடி ஆகியோர் இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் சேர்ந்துவிடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X