கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வேலூர் தேர்தல் ரத்து செல்லும்: ஐகோர்ட் உத்தரவு

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

சென்னை, வேலுார் லோக்சபா தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் தாக்கல் செய்த மனுக்களை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.வேலுார் லோக்சபா தொகுதியில் தேர்தலை ரத்து செய்து, தேர்தல் கமிஷன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், புதிய நீதி கட்சி வேட்பாளர், ஏ.சி.சண்முகம் தாக்கல் செய்த மனு:ஒரு வேட்பாளர் செய்த தவறுக்காக, அனைத்து வேட்பாளர்களையும் போட்டியிட விடாமல், தேர்தல் ஆணையம் தண்டித்துள்ளது. தேர்தலை ரத்து செய்ய, மத்திய அரசுக்கோ, ஜனாதிபதிக்கோ அதிகாரமில்லை. ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டால், சம்பந்தப்பட்ட வேட்பாளரை தான், தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்ய முடியாது. ஊழல் நடவடிக்கைக்காக, தேர்தல் ரத்து, தள்ளிவைக்க, மக்கள் பிரநிதித்துவ சட்டம் அனுமதிக்கவில்லை. வாக்காளர்களை குறிவைத்து, பணம் கொடுப்பதற்கான தயாரிப்பு பணிகளில், வேட்பாளர் இருந்ததாகவும், அது தடுக்கப்பட்டு விட்டதாகவும், தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.எனவே, தேர்தல் ரத்து உத்தரவை, ரத்து செய்து, ௧௮ம் தேதி தேர்தல் நடத்த, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று, சுயேச்சை வேட்பாளர் சுகுமார் என்பவரும், மனு தாக்கல் செய்தார்.அரசு விடுமுறை தினமான நேற்று, நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்', அவசர வழக்காக, இதை விசாரித்தது. ஏ.சி.சண்முகம் சார்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன்; சுகுமார் சார்பில், மூத்த வழக்கறிஞர், ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்; தேர்தல் ஆணையம் சார்பில், வழக்கறிஞர் நிரஞ்சன் ஆஜராகினர். சதீஷ் பராசரன்: வேலுார் தொகுதியில், ௨௨ பேர் போட்டியிடுகின்றனர். தி.மு.க., வேட்பாளருக்கு எதிராக தான் குற்றச்சாட்டு உள்ளது. அதற்காக, தேர்தலையே ரத்து செய்து, மற்ற வேட்பாளர்களுக்கும் ஏன் தண்டனை விதிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்திருந்த பணம், பறிமுதல் செய்யப்பட்டு விட்டது. அதனால், வாக்காளர்களுக்கு பணம் போய் சேரவில்லை.ஏ.ஆர்.எல்.சுந்தரேசன்: லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்ட பின், நாடு முழுவதும், ௧,௦௦௦ கோடி ரூபாய்க்கும் மேல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளுக்கு எல்லாம், தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒரே ஒரு தொகுதிக்கு மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், முறைகேடு நடக்கவில்லை.நிரஞ்சன்: வேலுார் தொகுதியில், தேர்தல் நடத்தும் சூழல் இல்லை. பல கோடி ரூபாய் பறிமுதல் செய்ததற்காக மட்டுமே, தேர்தலை ரத்து செய்யவில்லை. அங்கு, அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. தேர்தலை ரத்து செய்தால், அதில், நீதிமன்றம் தலையிட முடியாது.நீதிபதிகள் உத்தரவு: வருமான வரித்துறை, தேர்தல் செலவின சிறப்பு பார்வையாளர்கள் அளித்த அறிக்கையை பரிசீலித்த பின், தேர்தலை ரத்து செய்ய, போதிய ஆதாரங்கள் உள்ளன என்ற முடிவுக்கு, தேர்தல் ஆணையம் வந்துள்ளது. பின், தேர்தலை ரத்து செய்ய, ஆணையம் பரிந்துரைத்துள்ளது.கைப்பற்றப்பட்ட சில ரூபாய் கட்டுகளில், யாருக்கு பணம் அனுப்ப வேண்டும் என, பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன; யாருக்கு வினியோகிக்க வேண்டும் என்ற விபரங்களுடன், சீட்டுகளும் இருந்துள்ளன என, தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ளது.தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட, ஆணையத்துக்கு அதிகாரம் இருக்கும்போது, தேர்தலை ரத்து செய்ய வேண்டிய தேவை இருக்கிறது என கருதினால், அதை ரத்து செய்யவும், அதிகாரம் உள்ளது. எனவே, தேர்தல் ஆணையத்தின் முடிவில் தலையிட முடியாது. மனுக்கள், தள்ளுபடி செய்யப்படுகின்றன.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.வேலுார், தி.மு.க., வேட்பாளர் கதிர் ஆனந்த், நேற்று, தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'வேலுார் தேர்தல் ரத்து உத்தரவை திரும்பப் பெற்று, தேர்தலை நடத்த வேண்டும்' என, கோரியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஏப்-201913:46:02 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN இறை ஞானம்,இறை பக்தி உள்ளவன் ஒருபோதும் தவரோ குற்றமோ செய்ய மாட்டான் நினைக்க கூட மாட்டான் ஆனால் .இல்லாதவன் பிறரை கொலை செய்யவும் துணிவான். துணையும் போவான். நாட்டுக்கு அவனால் பயனில்லை . இறை பக்தி உள்ளவனே வேண்டும். அருள்வாய் இறைவா>>>>>>>>>
Rate this:
Share this comment
Cancel
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
19-ஏப்-201913:42:45 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அந்தோ பாவம் . கொள்ளை பணம் கோர்டுக்கு போனதோ. இப்படி பணத்தை பதுக்குகிறார்கள் என்றுதான் பணபரிமாற்றமில்லா பரிவர்தனை (ஆன்லைன்) என்று மோடி அவர்கள் ஓர் ஊழலற்ற நல்ல திட்டத்தை கொண்டு வந்தார் .அதை மதியாமல் பதுக்கியதால் வந்த விளைவு. ஆட்சிக்கு வந்தால் இன்னும் எவ்எளவு குற்றம் செய்வார்கள் என மக்கள் வியப்படைகிறார்கள். மோடி அவர்கள் தூய்மை நாடாக இரவு பகலாக படும் பாட்டை கட்டிய கோட்டையை இப்படியா இடிக்க நினைக்கிறார்கள். இறைவா அவர்களை கண்காணியும் .நல்லதுக்கு நல்லவருக்கு துணை நிற்பாய் என வணக்குகிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X