பொது செய்தி

தமிழ்நாடு

பிரசாரத்தில் 'கோலிவுட்' அடக்கி வாசித்தது ஏன்

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (1)
Advertisement

சென்னை,வருமான வரித்துறை நடவடிக்கை காரணமாக, தேர்தல் பிரசாரத்தில், தமிழ் நடிகர், நடிகையர் பலர் அடக்கி வாசித்துள்ளனர்.'வாயை திறந்தாலே, வருமான வரித்துறை நடவடிக்கை பாயும்' என்ற பயத்தில், கோலிவுட்டின் முன்னணி நடிகர், நடிகையர் பலர், இந்த தேர்தலில் வாயை திறக்கவில்லை.
நடிகர் கமலுக்கு ஆதரவாக கூட, நடிகர்மற்றும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலர் பேசவில்லை. வழக்கம் போல் ஓரிருவர் மட்டும்,'தேர்தலில் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்' என, வலியுறுத்தினர்.கடந்த முறை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் துடிதுடித்த, தயாரிப்பாளர் சங்க தலைவர், விஷால், இம்முறை காணாமல் போய் விட்டார். அரசுக்கு எதிராக, டுவிட்டர் பக்கத்தில் கூட, விஷால் வரவில்லை. கட்சி சார்ந்த நடிகர், நடிகையர் மட்டுமே பிரசாரம் செய்தனர். கமல் கட்சியில் உள்ள கோவை சரளா கூட, பெரிதாக பிரசார மேடைகளில் முழங்கவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
18-ஏப்-201903:20:43 IST Report Abuse
meenakshisundaram பயம் அதனால் இல்லே. திமுக வரலாம் என்று காசுக்காக கூவும் சேனல் கள் பத்திரிக்கைகள் கண்டு மீண்டும் நரகத்துக்கு திரையுலகம் சென்று விடுமே என்ற அச்சமே. திரை உலகத்துக்குள் புகுந்து விளையாடினவன் தானே திமுக சேனல் முதலாளி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X