ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பு வழக்கு| Dinamalar

ஓட்டு இயந்திரங்கள் பாதுகாப்பு வழக்கு

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (1)

புதுடில்லி, 'ஓட்டுப் பதிவு முடிந்த மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்' என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.தமிழகத்தைச் சேர்ந்த அம்பேத்கர் சட்ட சங்கத்தின் தலைவர் எம். ஸ்ரீனிவாசன், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள. பொதுநலன் வழக்கு:லோக்சபாவுக்கான முதல் கட்டத் தேர்தல் ஏப்., 11ல், பல மாநிலங்களில் நடந்தது. அப்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என்பது உட்பட பல புகார்கள் எழுந்துள்ளன.டில்லியில் பேட்டியளித்த எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரத்தின் மீது நம்பிக்கையில்லை என, கூறிஉள்ளனர். இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிருப்தி தெரிவித்து, முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உள்ளிட்டோர், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிஉள்ளனர்.தேர்தல் முடிந்து, முடிவுகள் வெளியிடப்படும் வரை, இந்த ஓட்டுப் பதிவு இயந்திரங்கள், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.ஆணையத்தின் செயல்பாடுகள் மீது, பல்வேறு தரப்பினரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். மேலும், ஓட்டு இயந்திரத்தில் பதிவான தகவல்களை திருத்தம் செய்ய முடியும் என்றும் கூறுகின்றனர்.அதனால், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் வரை, இந்த ஓட்டுப் பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்காமல், அவற்றின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X