அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெற்றி நிச்சயம்.இது அம்மன் சத்தியம்!

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (12)
Advertisement
வெற்றி நிச்சயம்.இது அம்மன் சத்தியம்!

கர்நாடகாவில் உள்ள துமகூரு தொகுதியில், முன்னாள் பிரதமரும், மத சார்பற்ற ஜனதா தளத் தலைவருமான, தேவ கவுடா போட்டியிடுகிறார்.துமகூரு, ஹேத்தனஹள்ளியில் உள்ள, ஆதிசக்தி மாரியம்மா கோவில், மிகவும் புராதனமானது. 1235ல் கட்டப்பட்ட இந்தக் கோவிலில் உள்ள அம்மன், மிகவும் சக்தி வாய்ந்தவர்; கேட்டதை நிறைவேற்றக் கூடியவர்.அம்மை நோய் ஏற்பட்டால், இங்கு பிரார்த்தனை செய்தால், எந்தப் பிரச்னையும் ஏற்படாது என, காலம் காலமாக, மக்கள் பின்பற்றி வருகின்றனர்.கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, மக்களின் இந்த நம்பிக்கையை, அரசியல் கட்சிகள் சரியாக பயன்படுத்திக் கொண்டன. கிராம மக்களை இந்தக் கோவிலுக்கு வரவழைத்து, பணத்தைக் கொடுத்து, தங்கள் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என, உறுதிமொழி எடுக்க வைத்தனர். சில இடங்களில், அம்மன் படத்தின் மீது, சத்தியமும் வாங்கினர்.




இங்கு, தேவ கவுடாவை எதிர்த்து, பா.ஜ., சார்பில், ஜி.எஸ்.பசவராஜு போட்டியிடுகிறார். கவுரவ பிரச்னை என்பதால், இந்த இருவரும், கண்டிப்பாக பணம் தருவர் என, இந்தப் பகுதி மக்கள் நம்புகின்றனர்.ஆனால், அம்மன் கோவில் முன்பாக, சத்தியம் வாங்குவது தான், இந்த மக்களின் பிரச்னையாக உள்ளது. இரண்டு வேட்பாளரிடமும் பணம் வாங்க முடியாததே, அதற்கு காரணம்.இந்தத் தொகுதியில், யாருக்கு வெற்றி என்பதை, யார் முதலில் பணம் தருகின்றனர் என்பதில் இருந்து, தெரிந்து கொள்ளலாம்.இங்கு, இன்று ஓட்டுப்பதிவு!- நமது நிருபர் -


Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Chennai,இந்தியா
24-ஏப்-201913:18:35 IST Report Abuse
Kannan எந்த அம்மன் கெளடா அவர்களே? நல்லா காமடி பண்றீங்கப்போ.
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201912:34:01 IST Report Abuse
ஆப்பு இவரு ஒருத்தர் ஜெயிச்சு வந்தாலே போறும். சோனியாஜி இவரை பிரதமர் ஆக்கிடுடுவாரு.
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201912:30:59 IST Report Abuse
ஆப்பு படிக்காத கிராம மக்களை எப்பிடியெல்லாம் வளைச்சு ஓட்டுக்களை விலைக்கு வாங்குறாங்க?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X