அத்வானி புறக்கணிப்பு ஏன்? அசோக் கெலாட் சர்ச்சை பேச்சு

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (21)
Advertisement

புதுடில்லி: ஓட்டு வங்கி அரசியலுக்காக, மூத்த தலைவர் அத்வானியை புறக்கணித்து, தலித் சமுதாயத்தை சேர்ந்த, ராம்நாத் கோவிந்தை, ஜனாதிபதியாக, பா.ஜ., மேலிடம் தேர்வு செய்ததாக, ராஜஸ்தான் மாநில முதல்வர், அசோக் கெலாட் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.






காங்., மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முதல்வருமான, அசோக் கெலாட், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: கடந்த, 2017ல், குஜராத் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, தலித் சமுதாயத்தினரின் ஓட்டுகள், பா.ஜ.,வுக்கு தேவைப்பட்டன. இதன் காரணமாக, ஜனாதிபதி பதவிக்கு, பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு பதில், ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தப்பட்டார். இவ்வாறு, அவர் கூறினார்.





லோக்சபா தேர்தல் நேரத்தில், நாட்டின் முதல் குடிமகன் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த, முதல்வர் கெலாட் மீது, பா.ஜ.,வினர் தேர்தல் ஆணையத்தில், புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
19-ஏப்-201900:06:26 IST Report Abuse
ஆப்பு அத்வானியைப் போட்டால் பப்ரி மஸ்ஜித் இடிப்பு முன்னிறுத்தப்படும். அதற்காகவே அவர் ஓரங்கட்டப்பட்டார். வாஜ்பாய் பிரதமரா இருந்த போதே அவரை ஓரம் கட்ட ஆரம்பிச்சுட்டாங்க. தவிர ஜனாதிபதிக்கு பெரிய தகுதியெல்லாம் தேவையில்லை. கையெழுத்துப்போடவும், எழுதிக் குடுத்ததை வாசிக்கவும், அவ்வப்போது தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்லவும் தெரிஞ்சா போறும்.
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஏப்-201914:08:38 IST Report Abuse
ஆரூர் ரங் காந்தியார் ஹரிஜன முன்னேற்றத்துக்கு பாடுபட்டார் தாழ்த்தப்பட்டோருக்கு ஹரிஜன் எனப் பெயரிட்டார் ஹரிஜன் என பத்திரிகையை நடத்தினர். இன்றுவரை அவரது பெயரைச்சொல்லி ஆளும் காங்கிரஸ் ஒரே ஒரு ஹரிஜனை பிரதமராக்கியதா? ஊருக்கு உபதேசம் அபத்தம்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
18-ஏப்-201914:05:09 IST Report Abuse
ஆரூர் ரங் வாக்கு வங்கியை நினைத்திருந்தால் 1979 இல் வாஜ்பாயி அத்வானி தாழ்த்தப்பட்டவரான ஜெகஜீவன்ராமை பிரதமராக்க முயற்சித்திருக்கவே மாட்டார்கள். அப்போதெல்லாம் ரிசர்வ் தொகுதிகளில் வாக்குப்பதிவே குறைவாக இருக்கும். அப்படியும் பிற்பட்ட சமுதாய ஒட்டு இழப்பைப் பற்றி கருதாமல் அவரை முன்னிருந்தினார்கள் .அதுதான் இன்றுவரை பாஜகவின் எண்ணவோட்டமே . இந்திராவின் சதியால்தான் அவர் பிரதமராக முடியவில்லை .இந்திரா அல்லக்கைகள் மூலம் தனது பிராமண உயர்குடி பிறப்பு (?)வளர்ப்பைக் காட்டி வென்றுகொண்டிருந்தது உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X