பொது செய்தி

தமிழ்நாடு

'மை'யுடன் வந்தால் ஓட்டலில் தள்ளுபடி

Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (5)
Advertisement
'மை'யுடன் வந்தால் ஓட்டலில் தள்ளுபடி

சென்னை: தேர்தலில் ஓட்டுப் போட்டு, விரலில், 'மை'யுடன் வந்தால், 10 சதவீதம் தள்ளுபடி தரப்படும் என, தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கம் அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல், 50 சதவீத தள்ளுபடி அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று, லோக்சபா தேர்தல் நடக்கிறது. ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க, பல்வேறு நிறுவனங்கள், ஓட்டு போடும் வாக்காளர்களுக்கு, பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன. இதன்படி, 'ஓட்டுப் போட்டு, விரலில் மையுடன் சாப்பிட வருவோருக்கு, 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை, ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள, 'கிளரியன் பிரசிடென்ட்' நட்சத்திர ஓட்டல், இன்று முதல், 21ம் தேதி வரை, 50 சதவீதம் தள்ளுபடி அறிவித்துள்ளது. 'ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும், சாப்பிட வரலாம்; ஓட்டு போட்டதன் அடையாளமாக, விரல் மையை காண்பித்தால் போதும்; ஒவ்வொரு முறையும், 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்' என, ஓட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஏப்-201911:56:05 IST Report Abuse
Boopathi Subramanian நியாயமான நேர்மையான நல்ல முயற்சி
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201910:14:37 IST Report Abuse
ஆப்பு விக்காத ஐட்டமெல்லாம் தள்ளி விடப் படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
18-ஏப்-201909:46:33 IST Report Abuse
ருத்ரா Great. சாப்பாடோட இந்த மை டிஷ் திட்டம் super.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X