பொது செய்தி

இந்தியா

மூடப்பட்டது, 'ஜெட் ஏர்வேஸ்'

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (37)
Share
Advertisement

புதுடில்லி: வங்கிகள், அவசர நிதியுதவி வழங்க மறுத்து விட்டதால், 'ஜெட் ஏர்வேஸ்' விமான சேவை நேற்றுடன்(ஏப்.,17) தற்காலிகமாக முடிவுக்கு வந்துவிட்டது.



latest tamil news



இந்நிறுவனம், 8,000 கோடி ரூபாய் கடனில் சிக்கியுள்ளது. இதையடுத்து, வங்கிகள் கூட்டமைப்பின் யோசனைப்படி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனர், நரேஷ் கோயல், தன் பங்கு மூலதனத்தை குறைத்துக் கொண்டார். இயக்குனர் குழுவில் மாற்றம் செய்து, 75 சதவீத பங்குகளை விற்க, வங்கிகள் கூட்டமைப்பு முயற்சித்தது. அது பலனளிக்க வில்லை. அதனால், இக்கூட்டமைப்பால் உறுதி அளித்தபடி, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில், 1,500 கோடி ரூபாய் முதலீடு செய்ய முடியவில்லை.


latest tamil news



இந்நிலையில், குத்தகைக்கு விமானங்களை அளித்த நிறுவனங்கள், பெரும்பாலான விமானங்களை திரும்பப் பெற்றுக் கொண்டன. அதனால், 2018, டிசம்பரில், 123 ஆக இருந்த விமானங்களின் எண்ணிக்கை, தற்போது, ஐந்தாக குறைந்து விட்டது. உடனடியாக, 400 கோடி ரூபாய் நிதியுதவி அளித்தால், சேவையை தொடரலாம் என, ஜெட் ஏர்வேஸ் தெரிவித்தது. ஆனால், மேற்கொண்டு நிதியுதவி அளிக்க, வங்கிகள் மறுத்து விட்டன. இதனால், ஜெட் ஏர்வேஸ் விமான சேவை, தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkata achacharri - india,இந்தியா
19-ஏப்-201910:34:09 IST Report Abuse
venkata achacharri விமானத்தை இயக்கம் விமான ஒட்டி விமான பணியாளர்களுக்கு கொடுக்கும் சமபலத்தை விட பெஞ்ச் தேய்த்து மற்றவர்களை வேலை செய்ய விடாமல் தடுக்கும் அக்கௌன்த்ஸ் அண்ட் ஆடிட் கூட்டம் உள்ளவரை எந்த ஒரு கம்பெனியும் நீண்ட நாள் லாபத்தில் இயங்காது
Rate this:
Cancel
S.Ganesan - Hosur,இந்தியா
18-ஏப்-201923:19:54 IST Report Abuse
S.Ganesan ஜெட் ஏர்வேஸின் கட்டணங்கள் மற்ற ஏர்வேஸ்களோடு ஒப்பிடும் போது மிக அதிகம். எனவே பெரும்பாலோர் குறைந்த கட்டணம் உள்ள விமானங்களையே தேர்ந்தெடுத்தனர். இதை தவிர எரிபொருள் விலை , , ஊழியர்கள் சம்பளம் போன்றவையும் அதிகரிக்கும் போது அதை திறம்பட நிர்வகிக்காமல் போனால் இது போல் நடைபெறும்.
Rate this:
Cancel
dandy - vienna,ஆஸ்திரியா
18-ஏப்-201914:22:20 IST Report Abuse
dandy ஒரு விமான சேவையை ஒழுங்காக நடத்தமுடியாத ...பாருக்குள்ளே நல்ல நாடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X