ஹிமாச்சலில் தேர்தல்; இமாலய சவால்!

Updated : ஏப் 18, 2019 | Added : ஏப் 18, 2019 | கருத்துகள் (2)
Advertisement

இந்தத் தேர்தல் திருவிழாவை, நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் எவ்வளவு மெனக்கெடுகிறது என்பதற்கு, ஹிமாச்சலப் பிரதேசம் ஒரு சிறந்த உதாரணம்.


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில், தற்போது கோடை வெயில் கொளுத்தும் நிலையில், இமய மலையின் மடியில் தவழும் இந்த மலை. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில், பனிப்பொழிவு இருக்கிறது. வேறுபட்ட நிலப் பகுதி, பனிப்பொழிவு, சாலை வசதிகள் இல்லை என, பல பிரச்னைகளுக்கு இடையே, இங்கு தேர்தல் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில், ஹிமாச்சலப் பிரதேச மக்கள், லோக்சபா தேர்தலாக இருந்தாலும், சட்டசபை தேர்தலாக இருந்தாலும், அதிக அளவில் ஓட்டுகளை பதிவு செய்கின்றனர். இங்கு, 75 சதவீதம் அளவுக்கு, ஓட்டுப் பதிவு நடந்துள்ளது.

ஹிமாச்சலின், 12 மாவட்டங்களில், 51.59 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதில், லாஹால் ஸ்பிடி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு, சாலை வசதி கிடையாது; பனிப்பொழிவு வேறு! மாநிலத்தில் உள்ள, 7,723 ஓட்டுச் சாவடிகளுக்கு, மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரம் மற்றும் மற்ற தேர்தல் பொருட்களை அனுப்புவது, சாதாரண விஷயமல்ல.

ஹிமாச்சலில் உள்ள, நான்கு தொகுதி களுக்கு, கடைசி கட்டமான, மே, 19ல் தான் தேர்தல் நடக்கிறது. ஆனால், தேர்தல் பணியில் உள்ள, 50 ஆயிரம் பேரும், தங்கள் பணியை துவக்கி விட்டனர். சில பகுதிகளில் உள்ள, ஓட்டுச் சாவடிகளுக்கு, 20 கி.மீ., வரை, தேர்தல் பொருட்களை சுமந்து, நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. லாஹால் ஸ்பிடி மாவட்டத்தின் தாஷ்காங்கில் உள்ள, ஓட்டுச் சாவடி தான், உலகிலேயே மிகவும் உயரமான ஓட்டுச் சாவடி. இது, கடல் மட்டத்திலிருந்து, 15 ஆயிரத்து, 256 அடி உயரத்தில் அமைந்துள்ளது. நாட்டிலேயே இரண்டாவது மிகப் பெரிய மண்டி தொகுதியின் கீழ், இந்தப் பகுதி வருகிறது.


இந்தியா - சீனா எல்லைக்கு, 29 கி.மீ.,யில், தாஷிகாங், கீதே கிராமங்கள் உள்ளன. இந்த இரண்டு கிராமங்களில், மொத்தமே, 30 ஆண்கள், 18 பெண்கள் என, 48 வாக்காளர்களே உள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து, 14 ஆயிரத்து, 400 அடி உயரத்தில் உள்ள, இதே மாநிலத்தைச் சேர்ந்த ஹக்கிம், உயரமான ஓட்டுச் சாவடியாக இருந்தது. 'மாநிலத்தில் பல ஓட்டுச் சாவடிகளுக்கு, 20 கி.மீ., நடந்தே செல்ல வேண்டியுள்ளது. ஓட்டுப் பதிவுக்கு, இரண்டு நாட்கள் முன்னரே நடக்கத் துவங்க வேண்டும்' என, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தினேஷ் குமார் கூறுகிறார்.

குலு மற்றும் லாஹால் ஸ்பிடி பகுதிகளில், தற்போதும் பனிப்பொழிவு உள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. குறிப்பாக, சக்தி என்ற பகுதிக்கு, 20 கி.மீ., நடக்க வேண்டியுள்ளது; இங்கு, 86 வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர். இதுபோல், 10 - 14 கி.மீ.,க்கு நடந்தே செல்லக் கூடிய பல ஓட்டுச் சாவடிகள், லாஹால் ஸ்பிடி மாவட்டத்தில் அமைந்து உள்ளன.ஆனாலும், ஒரு ஓட்டைக் கூட இழக்கக் கூடாது என, கங்கணம் கட்டி, தேர்தல் ஆணையம் தீவிரமாக செயல்படுகிறது. ஒரே சாதகமான விஷயம், தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள், இந்த இயற்கை சூழ்நிலை, நிலச் சூழலை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றுவதே, மாநிலத்தில், அதிக அளவு, ஓட்டுப் பதிவாவதற்கு முக்கிய காரணமாகும்.

- அஸ்வனி சர்மா -
சிறப்பு செய்தியாளர்

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஏப்-201910:18:03 IST Report Abuse
Srinivasan R இவர்களும் வீரர்களே.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-ஏப்-201907:53:14 IST Report Abuse
Srinivasan Kannaiya ஒரே சாதகமான விஷயம், தேர்தல் பணியில் உள்ள அதிகாரிகள், இந்த இயற்கை சூழ்நிலை, நிலச் சூழலை நன்கு அறிந்தவர்கள். அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் பணியாற்றுவதே, மாநிலத்தில், அதிக அளவு, ஓட்டுப் பதிவாவதற்கு முக்கிய காரணமாகும். இறைவன் கொடுத்த வரப்பிரசாதம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X